ஸ்டாலின் செயல்படாத தலைவர்; உண்மையான திமுக தொண்டர்கள் என் பக்கமே உள்ளனர்: அழகிரி பேச்சு
ஜியோவின் பிராட்பேண்ட் சேவை விரைவில் வருகிறது: ‘ஜியோ ஜிகா ஃபைபர்’, ஜியோபோன்-2
பசுமை வழிச் சாலையால் யாருக்கு பலன்? விரைவான போக்குவரத்துக்கா? கனிமவள ஏற்றுமதிக்கா?
சுங்கவரி இல்லாத வழித்தடம்
10 லட்சம் மரக் கன்றுகள்
ஜெயலலிதா வாக்குறுதி
4725 டன் அரிசி உற்பத்தி அழியும்
நிலத்துக்கு இழப்பீடு
பசுமை சாலை திட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது திடீர் மறியல்: சேலத்தில் திமுகவினர் 400 பேர் கைது
ஸ்டாலின் கைது செய்தி
சென்னை - சேலம் பசுமை வழிச் சாலை; காஞ்சி மாவட்டத்தில் 1,300 ஏக்கர் நிலம் கையகப்படுத்த முடிவு: 42 கிராமங்கள் வழியாக 59 கி.மீ. தூரம் கடந்து செல்கிறது
ஆங்காங்கே எல்லை கற்கள்
கிணறு, ஏரி, கால்வாய் அழிப்பு
5 ஆயிரம் வீடுகள் பாதிப்பு
மண்ணிவாக்கம் - பெருநகர்
ரகசிய ஆய்வு
பசுமை சாலைக்கு தொடரும் எதிர்ப்பு: தி.மலை மாவட்டத்தில் தற்கொலை முயற்சி; சேலம் அருகே 16 பேர் கைது
சுவிட்சர்லாந்தை வீழ்த்தி கால் இறுதிச் சுற்றில் நுழைந்த சுவீடன்
உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் நாக்-அவுட் சுற்று ஆட்டத்தில் சுவீடன் 1-0 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை வென்று கால் இறுதிச் சுற்றில் நுழைந்தது.
உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் சுவீடன், சுவிட்சர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று இரவு 7.30 மணிக்கு செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடைபெற்றது.
ஆட்டம் தொடங்கியது முதலே சுவிட்ர்லாந்து வீரர்கள் ஆக்ரோஷமான ஆட்டத்தைத் தொடங்கினர். முதல் நிமிடத்திலேயே சுவிட்சர்லாந்து வீரர் ஜோசி டிர்மிக் பாஸ் செய்த பந்தை ஜெர்டன் ஷகிரி பாக்ஸ் பகுதியிலிருந்து கோலை நோக்கி உதைத்தார். ஆனால் கோல் வலையை விட்டு பந்து விலககிச் சென்றது.
இதைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்து வீரர் கிரானிட் ஜாகா பவுல் செய்ததால் சுவீடன் வீரர்களுக்கு ஃப்ரீ கிக் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் அதை கோலாக்கத் தவறினார் சுவிட்சர்லாந்து வீரர் ஓலா டோவோனன்.
3-வது நிமிடத்தில் சுவீடன் வீரர் மார்க்கஸ் பெர்க் செய்த பவுல் காரணமாக சுவிட்சர்லாந்துக்கு ஃப்ரீ கிக் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் அந்த முயற்சியும் கோலாகவில்லை. ஆட்டத்தின் 7-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து பிளெரிம் சைமெய்லி பாஸ் செய்த பந்தை பாக்ஸ் பகுதியிலிருந்து ஸ்டீவன் சுபேர் அடித்தார். ஆனால் கோல் கம்பத்துக்கு வெளியே பந்து சென்றது.
அதற்கடுத்த நிமிடத்திலேயே சுவீடன் அணியின் ஓலா டோவேனன் பாஸ் செய்த பந்தை கோல் வலையை நோக்கி மார்க்கஸ் பெர்க் உதைத்தார். ஆனால் இந்த பந்தை கோல்கீப்பர் தடுத்துவிட்டார். ஆட்டத்தின் 14-வது நிமிடத்தில் சுவீடன் வீரர் மைக்கேல் லஸ்டிக் பாக்ஸ் பகுதியிலிருந்து கோல் வலையை நோக்கி உதைத்த பந்து இடதுபக்கமாக விலகிச் சென்றது.
ஆட்டத்தின் 31-வது நிமிடத்தில் சுவீடன் வீரர் மைக்கேல் லஸ்டிக் செய்த பவுல் காரணமாக அவருக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
ஆட்டத்தின் 38-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து வீரர் ஸ்டீவன் சுபேர் பாஸ் செய்த பந்தை பிளெரிம் சைமெய்லி பாக்ஸ் பகுதியின் மையத்திலிருந்து உதைத்தார். இந்த பந்து கோல் கம்பத்திலிருந்து விலகிச் சென்றது.
முதல் பாதி வரை 0-0 என்ற நிலையே நீடித்தது. 2-வது பாதியின் தொடக்கத்திலேயே இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
ஆட்டத்தின் 49-வது நிமிடத்தில் சுவீடன் வீரர் விக்டர் கிளாசன் கடத்தித் தந்த பந்தை ஓலா டோவோனன் கோலாக்க முயற்சித்தார். ஆனால் பந்து கோல் கம்பத்துக்கு மேலாக சென்று விரயமானது.
66-வது நிமிடத்தில் சுவீடனுக்கு அருமையான வாய்ப்புக் கிடைத்தது. அதைச் சரியாகப் பயன்படுத்தினார் எமில் போர்ஸ்பெர்க். ஓலா டோவோனன் பாஸ் செய்த பந்தை பாக்ஸ் பகுதிக்கு எடுத்துச் சென்ற போர்ஸ்பெர்க் கோல் வலையை நோக்கி வேகமாக உதைத்தார். அதை தடுக்க சுவிட்சர்லாந்து வீரர் முயன்றார். ஆனால் அது அவரது காலில் பட்டு கோல் வலைக்குள் புகுந்தது. இதையடுத்து 1-0 என்ற கணக்கில் சுவீடன் முன்னிலை வகித்தது. 68-வது நிமிடத்தில் சுவீடன் வீரர் தள்ளிவிட்டதாக சுவிட்சர்லாந்தின் கிரானிட் ஜாகாவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
79-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின் ரிகார்டோ ரோட்ரிக்ஸ் பாஸ் செய்த பந்தை தலையால் முட்டி கோலாக்க முயற்சித்தார் ஜோஹன் ஜோரு. ஆனால் அதை கோல்கீப்பர் திறமையாகத் தடுத்துவிட்டார். இறுதி வரை இந்த நிலை நீடிக்க 1-0 என்ற கணக்கில் சுவீடன் வெற்றி கண்டது.
ஜப்பான் அணி கேப்டன் ஓய்வு
உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் ஜப்பான் அணி தோல்வி கண்டதன் எதிரொலியாக தனது ஓய்வு முடிவை ஜப்பான் அணி கேப்டன் மகடோ ஹசீபே அறிவித்தார்.
ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்துத் தொடரின் நாக்-அவுட் சுற்றுக்கு ஜப்பான் முன்னேறியிருந்தது. இந்த நிலையில் அந்த அணி பெல்ஜியத்துக்கு எதிரான போட்டியில் தோல்வி கண்டு வெளியேறியது.
இதையடுத்து அணியின் கேப்டன் ஹசீபே தனது ஓய்வு முடிவை நேற்று அறிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “ரஷ்ய உலகக் கோப்பையுடன் நான் தேசிய அணிக்காக விளையாடுவதில்லை என்று முடிவு செய்துவிட்டேன். உலகக் கோப்பை போட்டியில் தோல்வி கண்டது மிகவும் வருத்தமளிக்கிறது. பெல்ஜியத்துடனான போட்டியில் நாங்கள் வெற்றி பெறும் நிலையில் இருந்தோம். ஆனால் கடைசி நேரத்தில் பெல்ஜியம் அணி வீரர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்.” என்றார்.
2010, 2014, 2018 உலகக் கோப்பை போட்டிகளில் ஜப்பான் அணிக்காக ஹசீபே விளையாடியுள்ளார். மேலும் அவர் கடந்த 12 வருடங்களாக ஜப்பான் அணிக்காக விளை யாடி வந்தார். 5 பயிற்சியாளர்களின் தலைமையில் அவர் அணிக்காக தனது பங்களிப்பைச் செய்துள்ளார். இதைத் தொடர்ந்து ஜப்பான் அணி, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை போட்டியில் பங்கேற்கவுள்ளது.
இங்கிலாந்தை மூழ்கடித்த குல்தீப் சுழல், ராகுலின் சரவெடி சதம்: முதல் டி20-யில் இந்தியா அபார வெற்றி
18.2 ஓவர்களில் இலக்கை ஊதியது இந்தியா.
95/1 என்று 12வது ஓவரில் வலுவாக இருந்த இங்கிலாந்து குல்தீப் யாதவ்வின் புரியாப் புதிர் ஸ்பின்னில் (5/24) 8 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது. உமேஷ் யாதவ்வும் அருமையாக வீசி ஜேசன் ராயை வீழ்த்தினார், புல்ஷாட் ஆடப்போனார் ராய், பந்து சற்றே தாழ்வாக வர பந்து மட்டையில் பட்டு ஸ்டம்பைத் தொந்தரவு செய்தது. பிறகு கடைசியில் கிறிஸ் ஜோர்டானை வீழ்த்தி 4 ஓவர்களில் 21/2 என்று சிறப்பாக வீசினார். ராய் 30 ரன்களில் வீழ்ந்தார். குல்தீப் யாதவ் இந்த ஒருநாள், டி20 தொடர்களில் இங்கிலாந்துக்கு காத்திருக்கும் அதிர்ச்சி அனுபல்லவி, சரணங்களுக்கு தொடக்கப் பல்லவி இசைத்துக் காட்டியுள்ளார். டி20-யில் முதல் முறையாக 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் குல்தீப்.
விக்கெட்டுகளை குல்தீப் யாதவ் வரிசையாகக் கைப்பற்றிய தருணத்தில் ஜோஸ் பட்லர் 46 பந்துகளில் 8 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 69 ரன்கள் விளாசினார். இலக்கை விரட்டுகையில் கே.எல்.ராகுல் 10 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 54 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். மொயின் அலிக்கு சாத்துமுறை நடந்தது இவர் 2.2 ஓவர்களில் 37 ரன்கள். ராகுலின் 2வது டி20 சர்வதேச சதமாகும்.
குல்தீப் யாதவ்வின் ராங் ஒன், லெக் ஸ்பின், மிக மெதுவான பந்துகளில் இங்கிலாந்து மிடில் ஆர்டர் நிலைகுலைந்தது, தோனி மீண்டுமொரு முறை அபாரமாக கீப்பிங் செய்து ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட் ஆகியோரை ஸ்டம்ப்டு செய்தார்.
ஆரவாரமான இந்திய ரசிகர்கள் கூட்டத்தின் முன் அதைவிடவும் ஆரவாரமான அதிரடி இங்கிலாந்து பேட்டிங் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் சரணடைந்தது. இயான் மோர்கன், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட் ஆகியோரை 14வது ஓவரில் சொற்பமாக வீழ்த்தி பெவிலியன் அனுப்பினார். 180 ரன்களாவது குறைந்தபட்சம் வந்திருக்க வேண்டும். மேலும் அலெக்ஸ் ஹேல்ஸ் திணறலை முடிவுக்குக் கொண்டு வந்த குல்தீப், 8 இன்னிங்ஸ்களில் 7வது அரைசதம் எடுத்த ஜோஸ் பட்லரையும் காலி செய்தார் குல்தீப்.
ராய், பட்லர் நல்ல தொடக்கம்:
இங்கிலாந்து ஆனால் தொடக்கத்தில் இந்தியாவின் சிறந்த பவுலர் புவனேஷ்வர் குமாரை உரித்தனர், அவரது 2 ஓவர்களில் 19 ரன்கள் விளாசப்பட்டது, 4வது ஓவரிலேயே கொண்டு வரப்பட்ட சாஹல் முதல் ஓவரிலேயே 16 ரன்கள் விளாசப்பட்டார். உமேஷ் யாதவ் டாப் எட்ஜில் பட்லரைக் காலி செய்திருந்தால் இங்கிலாந்து இன்னும் கூட குறைந்த ஸ்கோரில் காலியாகி இருக்கும். அலெக்ஸ் ஹேல்ஸ் 18 பந்துகளில் 8 ரன்கள் என்று ஒன்றும் புரியாதவராக ஆடினார். கடுமையாகத் தடவிய ஹேல்ஸ், கடைசியில் குல்தீப்பிடமும் தடவ ஒரு நேர் பந்தில் கடுப்பில் ஒரு ஸ்வீப் ஆடி பந்தைக் கோட்டை விட்டார் பவுல்டு ஆனார்.
அடுத்த ஓவரில்தான் இங்கிலாந்தை முற்றுகையிட்டு ஆட்கொண்டார் குல்தீப்; இயன் மோர்கன் ஸ்லாக் ஸ்வீப் செய்ய முயன்று கோலியிடம் கேட்ச் ஆனார். 3வது பந்தில் குல்தீப்பின் ராங் ஒன்னுக்கு ஸ்டம்ப்டு ஆனார். அடுத்த பந்தே ஜோ ரூட் பந்து உள்ளே வரும் என்று இறங்கி வந்து ஆடப்போக பந்து எதிர்த்திசையில் ஸ்பின் ஆகியது தோனிக்கு 2வது ஸ்டம்பிங். 50/0 என்று இருந்த இங்கிலாந்து 107/5 என்று ஆனது. கடைசியில் டி.ஜே.வில்லே 15 பந்துகளில் 2 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் அடித்து 29 எடுக்க பட்லர் 18வது ஓவர் வரை நின்று 69 எடுக்க இங்கிலாந்து 159/8 என்று முடிந்தது. இந்தியா தரப்பில் குல்தீப் 5, பாண்டியா 1, உமேஷ் யாதவ் 2 விக்கெட்.
ஷிகர் தவண் 4 ரன்களில் டி.ஜே.வில்லேவின் பந்தில் இன்சைடு எட்ஜில் பவுல்டு ஆனார். அடுத்து வந்த ராகுல் அருமையான டச்சில் இருப்பது அவரது பேட்டிங்கில் பளிச்சிட்டது, ஆனாலும் ஒரு பந்தை அவர் பேக்வர்ட் பாயிண்ட் திசையில் காற்றில் ஆட பந்து கேட்சாக வந்தது ஜேசன் ராய் கோட்டை விட்டார். 26/2 என்று ஆகியிருக்கும் ஆனால் ராயின் தவறை பயன்படுத்திய ராகுல் அதன் பிறகு லியாம் பிளங்கெட்டை 4வது ஓவரில் ஒரு பிளிக், கட் பவுண்டரிகள் அடித்தார். மொயின் அலி வந்தவுடன் ரிவர்ஸ் ஸ்வீப் பவுண்டரி மற்றும் ஒரு லாங் ஆன் சிக்ஸ். லியாம் பிளெங்கெட் மீண்டும் பந்து வீச வந்த போது 6,4,4,6 என்று நாசம் செய்யப்பட்டார். 37 பந்துகளில் 85 ரன்கள் என்று இருந்த போது விரைவுச் சதத்துக்கு ராகுல் தயாராக இருந்தார், ஆனால் இங்கிலாந்து கொஞ்சம் இந்தியாவைக் கட்டுப்படுத்தியது ஆனால் அவர் சதமடிப்பதை ஒன்றும் செய்ய முடியவில்லை. ரோஹித் சர்மா 3 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 32 எடுத்து ரஷீத்திடம் ஆட்டமிழக்கும் போதே இந்திய அணி 130/2 என்று இருந்த்து, ரோஹித், ராகுல் கூட்டணி 11 ஒவர்களில் 123 ரன்களைச் சேர்த்ததில் ரோஹித் பங்களிப்பு 32 மட்டுமே. ராகுல் 101 நாட் அவுட், விராட் கோலி 1 சிக்சருடன் 20 நாட் அவுட்.
இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷீத் மட்டுமே சக்சஸ்புல் பவுலர் (1/25). ஆட்ட நாயகன் குல்தீப் யாதவ். வரும் வெள்ளியன்று கார்டிப்பில் இந்தியா தொடரை வெல்ல நம்பிக்கையுடன் ஆடும், இங்கிலாந்து குல்தீப் யாதவ் அச்சுறுத்தலுக்கு வழி கண்டுபிடிக்க வேண்டும். பிரிஸ்டலில் ஞாயிறன்று இறுதி டி20 போட்டி.
குல்தீப் யாதவ் எங்களை தவறான முடிவுகளை எடுக்க வைத்து ஏமாற்றினார்: இங்கிலாந்து கேப்டன் மோர்கன்
இங்கிலாந்தில் தன் முதல் போட்டியிலேயே 24 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள், அதிலும் ஒரே ஓவரில் 3 நட்சத்திர வீரர்களை திகைக்கவைக்கும் வகையில் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது வென்ற குல்தீப் யாதவுக்கு புகழாரம் சூட்டப்பட்டு வருகின்றன.
இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன், ‘குல்தீப் யாதவ் எங்களை தவறாக நம்பவைத்து முற்றிலும் ஏமாற்றிவிட்டார்’ என்று புகழ்மாலை சூட்டியுள்ளார். இங்கிலாந்து வீரர்கள் குல்தீப்பைக் கண்டு பதற்றமடைந்தனரே தவிர அவரை நேர்மறையாக விளையாட முடியவில்லை, விளையாடத் தவறிவிட்டனர்.
இந்நிலையில் இங்கிலாந்து ஒருநாள் அணி, டி20 கேப்டன் இயன் மோர்கன் கூறும்போது, “பெங்களூருவிலும் நாங்கள் சரியாக ஆடவில்லை (அப்போது சாஹல் 6/25 என்று அசத்தினார்), ஆனால் அந்த ஆட்டத்துக்கும் இதற்கும் வேறுபாடு உள்ளது. குல்தீப் 4 பந்துகளில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி எங்களை தவறான முடிவுகளை எடுக்க வைத்து ஏமாற்றிவிட்டார். பந்தைத் தூக்கி அடித்து ஆட்டமிழந்ததைக் கூறவில்லை, குல்தீப் எங்களை முற்றிலும் ஏமாற்றிவிட்டார், அதாவது அவர் மிகச்சிறப்பாக வீசினார்.
30-40 ரன்கள் குறைவாக எடுத்தோம். நன்றாகத் தொடங்கினோம், குல்தீப் நன்றாக வீசினார், ஆனால் அவரை இதை விடவும் சிறப்பாக ஆட முடியும். அடுத்த போட்டியில் எங்கள் திட்டங்களை மதிப்பீடு செய்ய வேண்டும் அத்திட்டங்கள் சரியானதாக அமைவதை உறுதி செய்ய வெண்டும், அதனை விடாப்பிடியாக பற்றிக் கொள்ள வேண்டும்.
ஒரு ஸ்பின்னரை எடுத்த எடுப்பில், இறங்கியவுடன் ஆடுவது கடினம், ஜோஸ் பட்லர், குல்தீப் பந்து வீச வரும்போது ஏற்கெனவே 35 பந்துகளை ஆடியிருந்தார்.
ஸ்பின் பந்து வீச்சை சிறப்பாக ஆடுபவர் ஜோஸ் பட்லர். அலெக்ஸ் ஹேல்ஸ் கூட வாய்ப்புகள் கொடுக்கவில்லை. ஆனால் எங்களை தவறான முடிவுகளை எடுக்குமாறுச் செய்தார் குல்தீப் யாதவ்.
ஒரு பவுலர் இருபுறமும் ஸ்பின் செய்கிறார், அதனை திறம்பட மறைக்கிறார் என்பது எதிர்கொள்ளக் கடினமான ஒரு விஷயம், ஏனெனில் அதுமாதிரி வீசுவதற்கு இங்கு ஆளில்லை. அதனால்தான் குல்தீப்புக்கு எதிராக திட்டமிடல் அவசியம் என்கிறேன்.
அரை வாய்ப்புகளை நாங்கள் பிடித்திருந்தால் ஆட்டம் இன்னும் கொஞ்சம் நெருக்கமாகியிருக்கும், கிறிஸ் ஜோர்டான் பவுண்டரியில் வாய்ப்பைப் பிடித்திருந்தாலோ, அல்லது முதலில் ஜேசன் ராய் கேட்சைப் பிடித்திருந்தாலோ ஆட்டம் வேறு மாதிரி சென்றிருக்கும்
ராகுல் அருமையாக ஆடினார், இன்றைய தினத்தில் பேட்டிங்கை வெகு சுலபமாக அவர் ஆடியது போல் தெரிகிறது.
இந்திய அணி வலுவான அணி, உண்மையில் வலுவான அணி” என்றார் மோர்கன்.
நானா நடிக்கிறேன்..? என்னைக் கவிழ்க்க இப்படியெல்லாம் விமர்சிக்கிறார்கள்: பிரேசில் நட்சத்திரம் நெய்மர் காட்டம்
ஒரேயொரு வீரரின் (நெய்மர்) அதீத நாடகீய நடத்தைகளால் தங்கள் அணி தோற்றது என்று மெக்சிகோ பயிற்சியாளர் நெய்மர் மீது கடும் குற்றச்சாட்டை வைக்க நெய்மர் பதிலடி கொடுத்துள்ளார்.
மெக்சிகோ 2-0 என்ற கோல் கணக்கில் அன்று பிரேசிலிடம் தோற்று வெளியேறியது. அதில் மெக்சிகோ வீரர் மிகுயெல் லயுன், தேவையில்லாமல் நெய்மரின் ஆபரேஷன் நடந்த கணுக்கால் மீது தன் ஷூவை தேய்த்தார் அல்லது மிதித்தார், இது ரெட் கார்டு சம்பவமாகும், இதற்கு நெய்மர் வலிகாரணமாக எதிர்வினையாற்றினார். நெய்மர் மீது எப்போதும் ஒரு சந்தேகம் உண்டு, ஏனெனில் எப்போதும் எதிரணியினர் தன்னை ஃபவுல் செய்து கொண்டேயிருக்கின்றனர் என்பதாக அவர் கொஞ்சம் கூடுதலாக வினையாற்றுவதே. ஒரு தள்ளுக்கு 16 முறை பல்ட்டி அடித்ததைப் பார்த்தோம், தன் வினைத் தன்னைச் சுடும் என்பது போல் உண்மையிலேயே வலியால் துடித்தால் கூட அது நெய்மரின் நாடகீய சேட்டை என்பது போல் உலகம் பார்க்கத் தொடங்கிவிட்டது.
மெக்சிகோ பயிற்சியாளரும் இதற்கு விதிவிலக்கல்ல, “கால்பந்துக்கே அவமானகரமானது இது. ஒரேயொரு வீரரால் நிறைய நேரம் விரயம் செய்யப்படுகிறது. இதனால் எங்கள் ரிதம் கெட்டுப் போனது. கால்பந்து அரங்கில் நெய்மர் ஓர் எதிர்மறை உதாரணமாக விளங்குகிறார். அவரை பின் தொடரும் சிறுவர்களுக்கும் இது கேடாகும். இது வலுவான விளையாட்டு, ஆண்களின் விளையாட்டு, இதில் நடிப்பதற்கு வேலையே இல்லை” என்றார் ஒசாரியோ.
நெய்மர் இதற்கு பதிலடி கொடுக்கும்போது, “இவை என்னை கவிழ்ப்பதற்காகக் கூறப்படுவதேயன்றி வேறில்லை. நான் விமர்சனத்தை மதிப்பவனில்லை, பாராட்டுதலையும் கூட நான் கண்டுகொள்ள மாட்டேன். ஏனெனில் இது ஒரு விளையாட்டு வீரனின் அணுகுமுறையில் தாக்கம் செலுத்தும்.
கடந்த 2 போட்டிகளாக நான் செய்தியாளர்களைக் கூட சந்திப்பதைத் தவிர்த்து வந்தேன். காரணம் அதிகம்பேர் ஏதேதோ பேசிக்கொண்டேயிருக்கின்றனர். பதற்றமடைகின்றனர். அவர்கள்தான் நடிக்கிறார்களோ? என் சகாக்களுடன் வெற்றிபெறவே இங்கு வந்துள்ளேன்” என்றார்.
“சினிமா மேஜிக்னு சொல்லி மக்களை ஏமாற்ற முடியாது” - கவுதம் கார்த்திக்
பரபரப்பான நாக்-அவுட் சுற்று ஆட்டத்தில் ஜப்பானை வெளியேற்றியது பெல்ஜியம் அணி: கால் இறுதியில் பிரேசிலைச் சந்திக்கிறது
உலகக் கோப்பை கால்பந்து நாக்-அவுட் சுற்று ஆட்டத்தில் பெல்ஜியம் அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது. இதையடுத்து கால் இறுதி ஆட்டத்தில் பிரேசிலைச் சந்திக்கவுள்ளது பெல்ஜியம்.
உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் நாக்-அவுட் சுற்று ஆட்டம் நேற்று முன்தினம் இரவு ரஷ்யாவின் ரோஸ்டோவில் நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் பெல்ஜியம் 3-4-3 என்ற பார்மெட்டிலும், ஜப்பான் 4-3-4 என்ற பார்மெட்டிலும் களமிறங்கியது. ஆட்டத்தின் 10-வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் ஜென் ஷோஜி 35 அடி தூரத்திலிருந்து கோலை நோக்கி உதைத்த பந்து கம்பத்துக்கு உயரே சென்றது.
16-வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் அக்சல் விட்செல் பாக்ஸ் பகுதியிலிருந்து இடது காலால் உதைத்த பந்தை ஜப்பான் கோல்கீப்பர் எஜ்ஜி கவாஷிமா அபாரமாக தடுத்தார்.
இதேபோல ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் ரொமேலு லுகாகு அடித்த பந்தையும் ஜப்பான் வீரர்கள் அபாரமாகத் தடுத்தனர்.
27-வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் கெவின் டி புருயுன் பாக்ஸ் பகுதிக்கு வெளியே இருந்து உதைத்த பந்து கோல் கம்பத்துக்கு வெளியே சென்றது.
ஆட்டத்தின் 31-வது நிமிடத்தில் ஜப்பான் அணிக்கு நல்ல வாய்ப்புக் கிடைத்தது. ஜப்பான் வீரர் தகாஷி இனுய், டிரைஸ் மெர்ட்டன்ஸ் பாஸ் செய்த பந்தை தலையால் முட்டி கோலாக்க முயற்சித்தார். ஆனால் அதை ஜப்பான் கோல்கீப்பர் அருமையாகத் தடுத்து கோல் விழாமல் காத்தார்.
முதல் பாதி வரை எந்த அணியும் கோல் போடவில்லை.
இந்த நிலையில் ஆட்டத்தின் 48-வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் ககு ஷிபாசகி பாஸ் செய்த பந்தை வலது காலால் தடுத்து கோல் வலைக்குள் திணித்தார் ஜென்கி ஹரகுச்சி. இதனால் மைதானமே ஜப்பான் வீரர்களின் கரகோஷத்தால் அதிர்ந்தது. இதையடுத்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது ஜப்பான்.
இதைத் தொடர்ந்து பெல்ஜியம் வீரர்கள் தங்களது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்த நிலையில் ஆட்டத்தின் 52-வது நிமிடத்தில் ஜப்பான் அணியினர் மேலும் ஒரு கோல் போட்டு பெல்ஜியம் அணியினருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர். ஜப்பான் வீரர் ஷின்ஜி ககவா பாஸ் செய்த பந்தை அழகாக கடத்திச் சென்று கோலாக்கினார் தகாஷினி இனுய். இதனால் ஜப்பான் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதையடுத்து ஜப்பான் ரசிகர்கள் மைதானத்தில் ஆனந்தக் கூத்தாடினர்.
ஆட்டத்தின் 62-வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் தாமஸ் முனீர் கடத்தித் தந்த பந்தை ரொமேலு லுகாகு பாக்ஸ் பகுதியிலிருந்து தலையால் முட்டி கோலாக்க முயற்சித்தார். இது ஜப்பான் வீரர்களால் தடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஜப்பான் வீரர்கள் தடுப்பாட்டம் மேற்கொள்ள ஆரம்பித்தனர். ஆனால் பெல்ஜியம் வீரர்கள் வீறுகொண்டு எழுந்து தாக்குதலைத் தொடுக்க ஆரம்பித்தனர். ஜப்பான் அணியினரின் தடுப்பாட்டத்தை உடைத்து அவர்கள் முன்னேறினர். இதற்கு அவர்களுக்கு நல்ல பலனும் கிடைத்தது.
ஆட்டத்தின் 69-வது நிமிடத்தில் கார்னரிலிருந்து கிடைத்த பந்தை பெல்ஜியம் வீரர் ஜான் வெர்டோன்ஜென் அபாரமாக கோல் வலைக்குள் திணித்தார். இதையடுத்து 1-2 என்ற கணக்கில் முன்னிலையைக் குறைத்தது பெல்ஜியம்.
அதற்கு அடுத்த 5 நிமிடங்களில் மேலும் ஒரு கோலைப் போட்டு ஜப்பான் வீரர்களை பீதிக்குள்ளாக்கினார் பெல்ஜியம் வீரர் மரோன் பெல்லானி. வலது புற கார்னரிலிருந்து ஈடன் ஹசார்ட் உதைத்த பந்தை தலையால் முட்டி கோலாக்கினார் மரோன் பெல்லானி. இதனால் ஸ்கோர் 2-2 என்ற கணக்கில் சமநிலைக்கு வந்தது.
இதனால் ஆட்டத்தில் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டது. இரு அணி வீரர்களும் கோல் அடிக்க தீவிர முயற்சி செய்தனர். ஆட்டத்தின் 78-வது நிமிடத்தில் பாக்ஸ் பகுதியில் கோலடிக்க கிடைத்த வாய்ப்பை வீணாக்கினார் பெல்ஜியம் வீரர் ரொமேலு லுகாகு. ஆட்ட நேரம் முடியும் நிலையில் இரு அணிகளும் சமநிலையிலிருந்தன.
காயங்களுக்கு இழப்பீடாக 6 நிமிடங்கள் வழங்கப்பட்டன. இதில் 4-வது நிமிடத்தில் கோலடித்தார் பெல்ஜியம் வீரர் நேசர் சட்லி. தாமஸ் முனீர் பாஸ் செய்த பந்தை பாக்ஸ் பகுதிக்குள் கொண்டு வந்து கோல் வலைக்குள் அபாரமாக திணித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார் நேசர் சட்லி. இறுதி வரை இந்த நிலை நீடிக்கவே பெல்ஜியம் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறியது.
ஜூலை 6-ம் தேதி கஸானில் நடைபெறும் கால் இறுதி ஆட்டத்தில் பலம் வாய்ந்த பிரேசிலைச் சந்திக்கவுள்ளது பெல்ஜியம்.
உ.கோப்பைக் காலிறுதியில் இங்கிலாந்து: தகராறுகள், சர்ச்சைகள் நிரம்பிய ஆட்டத்தில் பெனால்ட்டியில் கொலம்பியாவை வீழ்த்தியது
2006-க்குப் பிறகு உலகக்கோப்பைக் காலிறுதிக்கு இங்கிலாந்து தகுதி பெற்றுள்ளது. மேலும் உலகக்கோப்பையில் முதல் முதலாக பெனால்டி ஷூட் அவுட்டில் இங்கிலாந்து வெற்றி சாதித்துள்ளது.
இங்கிலாந்தின் ஹாரி கேன் 57வது நிமிடத்தில் பெனால்டி மூலம் கோல் அடித்து தனது 6வது கோலை இந்த உலகக்கோப்பையில் அடித்துள்ளார் ஹாரி கேன்.
கொலம்பியா அணிக்குப் பெரிய பின்னடைவு அதன் பிரதான வீரர் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் காயமடைந்ததே.
பெனால்டியில் நடந்தது என்ன?
இங்கிலாந்துக்கு பெனால்டி ஷூட் அவுட் என்பது பதற்றமான ஒரு விஷயம், அணி மேலாளர் சவுத் கேட் மிகவும் பதற்றமாக சில வார்த்தைகளை ஷூட் அவுட் முன் வீரர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
முதலில் கொலம்பியாவின் ஃபால்கோ முதல் பெனால்டியை இங்கிலாந்து கோல் கீப்பரைத் தாண்டி அடித்தார் கொலம்பியா 1-0.
இங்கிலாந்தின் ஹாரி கேன் அடுத்ததாக கோல்வலையைத் தாக்க 1-1,
அடுத்து கொலம்பியாவின் குவாட்ராடோ நேராக உள்ளே செலுத்த கொலம்பியா 2-1
அடுத்து ராஷ்போர்டும் தவறு செய்யவில்லை ஆட்டம் 2-2.
கொலம்பியாவின் மியூரியல் கோலுக்குள் செலுத்தினார் கொலம்பியா 3-2.
இங்கிலாந்து வீரர் ஜோர்டான் ஹெண்டர்சன் அடித்த பக்கவாட்டு பாத உதையை ஆஸ்பினோ இடது புறம் பாய்ந்து தட்டிவிட கொலம்பியா 3-2 முன்னிலை.
ஆனால் கொலம்பியாவின் யூரிபி மேலே கோல் போஸ்ட்டில் அடிக்க கொலம்பியா 3-2.
இங்கிலாந்தின் டிரிப்பியர் டாப் கார்னரில் கோலுக்குள் திணிக்க 3-3
கொலம்பியாவின் கார்லோஸ் பாக்காவின் ஷாட்டை இங்கிலாந்து கோல் கீப்பர் பிக்ஃபோர்டு தடுக்க 3-3.
இங்கிலாந்தின் எரிக் டயர் தாழ்வாக கோல் நோக்கி அடிக்க ஆஸ்பினோ வலது புறம் டைவ் அடித்தார் பந்து அவர் விரல்களில் பட்டது ஆனால் பந்து கொல் 4-3, இங்கிலாந்துக்கு வெற்றி, காலிறுதிக்குத் தகுதி பெற்றது.
விறுவிறுப்பான ஆட்டமாக இருந்தாலும் கடும் பவுல்கள், மோதல் நிரம்பிய ஆட்டம்:
ரக்பி அல்லது மல்யுத்தத்தை பெரும்பாலும் நினைவூட்டிய தகராறுகள் நிரம்பிய இந்த ஆட்டத்தில் மொத்தம் 36 ஃபவுல்கள், 8 மஞ்சள் அட்டைகள். நடுவர் மார்க் க்ரெய்கர் நேற்று ஒரு 8-9 பெக்குகளைப் போட்டால்தான் அவருக்கு இந்த ஆட்டத்தை மறக்க முடியும் என்ற அளவுக்கு கடும் மோதல் நிரம்பிய ஆட்டமாக அமைந்தது.
5வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் ரஹீம் ஸ்டெர்லிங்கின் ஓட்டத்தைத் தாங்க முடியாத கொலம்பிய வீரர் யெரி மினா பந்தைக் ‘கை’யாண்டார், கார்னர் வாய்ப்பு கிடைத்த்து, கார்னர் ஷாட்டில் ஆஷ்லி யங்கின் முயற்சியை கொலம்பிய கோல் கீப்பர் ஆஸ்பினாவுக்கு எந்த வித குடைச்சலையும் கொடுக்கவில்லை.
இங்கிலாந்து, கொலம்பிய ரசிகர்களின் கடும் ஆரவாரங்களுடன் ஆட்டம் தொடங்கிய போது 16வது நிமிடத்தில் இங்கிலாந்துக்கு உண்மையான வாய்ப்பு கிடைத்தது. கெய்ரன் ட்ரிப்பியர், ஜெஸி லிங்கர்டுடன் கூட்டணி போட்டு வலது புறம் வேகமாக எடுத்துச் சென்று ஹாரி கேனுக்கு கிராஸ் செய்ய அவரது தலை முட்டல் வெளியே சென்றது.
22வது நிமிடத்தில் கொலம்பியாவின் சாண்டியாகோ ஆரிஸ், யுவான் குவாட்ராடோ இணைந்து இடது புறம் நிறைய இடம் கிடைக்க பந்தை எடுத்துச் சென்று உள்ளே நுழைய அங்கு ஃபால்கோவின் முயற்சியை ஜான் ஸ்டோன் மறித்தார்.
பிறகு இடைவேளைக்கு 5 நிமிடங்கள் முன்பாக இங்கிலாந்து வீர்ர் ஜோர்டான் ஹெண்டர்சனை கொலம்பியாவின் வில்மர் பாரியோஸ் தலையால் இடிக்க இங்கிலாந்து ஃப்ரீகிக் கேட்டது, ஆனால் நடுவர் மார்க் கிரெய்கர் மஞ்சள் அட்டை மட்டுமே காண்பித்தார். பிறகு ஸ்டாப்பேஜ் நேரத்தில் லிங்கர்ட் அடித்த ஷாட் ஒன்று மேலே சென்றது. இவையெல்லாம் வாய்ப்புகள்.
ஆட்டத்தின் 39வது நிமிடத்தில் இங்கிலாந்துக்கு ஃப்ரீ கிக் கிடைத்தது, ட்ரிப்பியரின் ஷாட் வீரர்கள் சுவருக்கு மேல் சென்றதில் எந்த ஒரு பயனும் இல்லை.
இங்கிலாந்து பெனால்டியில் முதல் கோல்: ஹாரி கேனின் 2018 உ.கோப்பை 6வது கோல்
இடைவேளை வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இடைவேளைக்குப் பிறகு தொடக்க நிமிடங்களில் சாண்டியாகோ ஆரிஸ் ஃபவுல் செய்ய இங்கிலாந்துக்கு ஃப்ரீ கிக் கிடைத்தது. யங்கின் ஷாட் தலையால் முட்டப்பட்டு கோட்டுக்கு வெளியே அனுப்பப்பட கார்னர் வாய்ப்பு இங்கிலாந்துக்கு கிடைத்தது. இந்த நடைமுறையில் கார்லோஸ் சாஞ்சேஸ் இங்கிலாந்தின் ஹாரி கேனை ரக்பி முறையில் இடைமறிக்க நினைத்தார், நடுவருக்கு வேறு வழியில்லை பெனால்டி வாய்ப்பு இங்கிலாந்துக்கு. அதனை ஹாரி கேன் கோலாக மாற்றினார் இங்கிலாந்து 1-0. ஹாரி கேனின் 6வது கோலாகும் இது. இதற்கு அடுத்தபடியாக இங்கிலாந்தின் டெலி ஆலியின் தலையால் முட்டிய பந்து ஒன்று துரதிர்ஷ்டவசமாக கோலிலிருந்து தப்பியது.
காயமடைந்த ஸ்ட்ரைக்கர், கோல் ஸ்கோரர் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் பெஞ்சிலிருந்து போட்டியைப் பார்த்துக் கொண்டிருக்க கொலம்பியர்களால் இங்கிலாந்தின் தடுப்பணையை உடைக்க முடியவில்லை. 90 நிமிட ஆட்டத்துக்கு 10 நிமிடங்கள் முன்னதாக குவாட்ராடோவின் நீண்ட தூர கோல் முயற்சியும் முற்றிலும் விரயமானது.
ஆட்டத்தின் 93வது நிமிடத்தில் 25 அடியிலிருந்து கொலம்பிய வீரர் யூரிபி அடித்த லாஃப்டட் ஷாட் வலது புறம் கோல் மேல் மூலையை நோக்கி உள்ளுக்குள் சென்று கொண்டிருந்த போது இங்கிலாந்து கோல் கீப்பர் பிக்ஃபோர்டு அருமையாக எம்பித் தட்டி விட்டார். இதன் விளைவாக கொலம்பியாவுக்குக் கார்னர் வாய்ப்புக் கிடைத்தது. வந்தப் பந்தை மெகுவய்ருக்கும் மேல் எம்பி கொலம்பிய வீரர் மினா வலுவாக பந்தை முட்ட பந்து தரையில் பட்டு ட்ரிப்பியருக்கும் மேல் எழும்பி கோலுக்குள் சென்றது, கொலம்பியா சற்றும் எதிர்பாராது 1-1 என்று சமன் செய்தது, இந்த உலகக்கோப்பையில் எப்போதும் கடைசி நிமிடங்களில் ஏதாவது திருப்பம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
கூடுதல் நேரத்தின் 6வது நிமிடத்தில் இடது புறம் கொலம்பிய வீரர் மொஜிகா வேகமாகச் சென்று ஒரு அபாரமான கிராஸ் செய்ய ஃபால்கோ அதனை தன் முன் காலால் ஒரு குத்து குத்த முயன்றார், பிக்போர்டு அருமையாகத் தடுத்தார். கொலம்பியா கூர்மையாக இல்லாவிட்டாலும் அபாயகரமாகத் திகழ்ந்தது. 13வது நிமிடத்திலும் மினா, சான்சேஸ் இருவரும் இங்கிலாந்து தடுப்பு வீரர்களைத் தாண்டி காற்றில் வந்த பந்துக்கு எம்பி தலையால் முட்ட பந்து கோல் போஸ்ட்டுக்கு மேலே சென்றது. கூடுதல்நேர 2ம் பாதியில் இங்கிலாந்தின் லிங்கர்ட் அடித்த பாஸை வார்டி ஓடிக்கொண்டே 15 அடியிலிருந்து கோல் நோக்கி அடித்தார், ஆனால் பாரியோஸ் மிக அபாரமாக அதைத் தடுத்தார். அதன் பிறகும் 23ம் நிமிடத்தில் இங்கிலாந்துக்கு கிடைத்த வாய்ப்பு வைடாகச் சென்றது கூடுதல் நேரத்திலும் 1-1 இக்கட்டு உடையவில்லை.
ஆட்டம் பெனால்ட்டிக்குச் சென்றது, இதில் எரிக் டயர் இங்கிலாந்துக்கு 4வது கோலை அடிக்க இங்கிலாந்து 4-3 என்று வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
டி20 போட்டி: இந்திய அணி டாஸ் வென்றது; தினேஷ் கார்த்திக்குக்கு இடம்?
ஓல்டுடிரோபார்டு நகரில் இன்னும் சிறிது நேரத்தில் தொடங்க உள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றது.
இங்கிலாந்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டி, 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முதலாவது டி20 போட்டி ஒல்டு டிராபோர்டு நகரில் இன்று நடக்கிறது.
டாஸ்வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பீல்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் ரோகித் சர்மா, ஷிகார் தவண், விராட் கோலி, ரெய்னா, கே.எல். ராகுல், தோனி, ஹர்திக் பாண்டியா, புவனேஷ் குமார், குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், யஜுவேந்திர சாஹல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த முறையும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்குக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி, நல்ல ஃபார்மில் இருந்தும் தினேஷ் கார்த்திக் பெஞ்சில் அமர வைக்கப்பட்டுள்ளது வேதனையாகும்.
ஆஸ்திரேலியாவுடன் ஒருநாள் போட்டியில் அதே அணி இந்தப் போட்டியில் மாற்றமில்லாமல் களமிறங்குகிறது. இங்கிலாந்து அணியில் ஜேஸன் ராய், ஜோஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோய் ரூட், மோர்கன், பேர்ஸ்டோ, மொயின் அலி, டேவிட் வில்லி, அதில் ரஷித், லியாம் பிளங்கெட், ஜோர்டான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்தியா ‘ஏ’ சாம்பியன்: இங்கிலாந்து ‘லயன்ஸை’ அடக்கிய ரிஷாப் பந்த், சாஹர்
ரிஷாப் பந்தின் பொறுப்பான பேட்டிங், சாஹரின் பந்துவீச்சால், முத்தரப்பு ஒருநாள் தொடரில் இங்கிலாந்து லயன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது இந்திய ஏ அணி.
மேற்கிந்தியத்தீவுகள், இங்கிலாந்து லயன்ஸ், இந்திய ஏ அணிகள் மோதிய முத்தரப்பு ஒருநாள் தொடர் நடந்தது. இதில் இறுதிப்போட்டிக்கு இந்திய ஏ, இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் தகுதி பெற்றன.
லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று இறுதிப்போட்டி நடந்தது. டாஸ் வென்ற இந்திய ஏ அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த இங்கிலாந்து லயன்ஸ் அணி, இந்திய ஏ அணி வீர்கள் தீபக் சாஹர், சர்துல் தாக்கூரின் வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விரைவாக விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியில் இருவர் மட்டுமே ஓரளவுக்கு ரன்களைக் குவித்தனர்.
அந்த அணி வீரர் ஹயின் சதம் அடித்து 108 ரன்களிலும், லிவிங்ஸ்டோன் 83 ரன்கள் சேர்த்தும் ஆட்டமிழந்தனர். இருவரும் 3-வது விக்கெட்டுக்கு 152 ரன்கள் சேர்த்தனர். 185 ரன்களுக்கு 3-வது விக்கெட்டை இழந்த இங்கிலாந்து லயன்ஸ் அணி அடுத்த 74 ரன்களுக்குள் மீதமிருந்த 7 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
இந்த இரு வீரர்கள் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர்.
50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து லயன்ஸ் அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 264 ரன்கள் குவித்தது. இந்திய ஏ அணி தரப்பில் தீபக் சாஹர், கலீல் முகமது தலா 3 விக்கெட்டுகளையும், சர்துல் தாக்கூர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
265 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய ஏ அணி 10 பந்துகள் மீதமிருக்கையில் இலக்கை அடைந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பிரிதிவ் ஷா, அகர்வால் நிலைத்து ஆடவில்லை. பிரிதிவ் ஷா 15 ரன்களில் வெளியேறினார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சுப்மான் கில் (20) ரன்னில் விக்கெட்டை டாஸனிடம் பறிகொடுத்தார்.
இந்தத் தொடரில் இரு சதங்கள் அடித்த மயங்க் அகர்வால் அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அகர்வால் 40 ரன்கள் சேர்த்த நிலையில், டாஸன் பந்துவீச்சில் எல்பிடபிள்யு ஆகி வெளியேறினார்.
ஸ்ரேயாஸ் அய்யர், விஹாரி கூட்டணி 4-வது விக்கெட்டுக்கு ஓரளவுக்கு நிலைத்து ஆடினார்கள். இந்தக் கூட்டணியும் நீண்டநேரம் நிலைக்கவில்லை. ஸ்ரேயாஸ் அய்யர் 44 ரன்களிலும், விஹாரி 37 ரன்களிலும் வீழ்ந்தனர்.
6-வது விக்கெட்டுக்கு ரிஷாப் பந்த், குர்னல் பாண்டியா கூட்டணி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். சிறப்பாக ஆடிய ரிஷாப் பந்த் அரை சதம் அடித்து 62 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். குர்னல் பாண்டியா 34 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய அணி 48.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 267 ரன்கள் சேர்த்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து லயன்ஸ் அணித் தரப்பில் டாஸன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
தமிழில் ட்வீட் செய்து ஹர்பஜன் சிங்கை கிண்டல் செய்த சச்சின்
பல்வேறு திரை பிரபலங்களும், கிரிக்கெட் வீரர்களும் ஹர்பஜன் சிங்குக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதில் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் என்று வர்ணிக்கப்படும் சச்சின், ஹர்பஜனுக்கு சற்று வித்தியாசமான முறையில் தனது வாழ்த்தை தெரிவித்திருக்கிறார்.
ஐபிஎல் போட்டியில் மும்பை அணியிலிருந்து சென்னை அணிக்கு மாறிய ஹர்பஜன் அதன் பின்னர் தனது ட்விட்டர் பதிவுகளில் தமிழில் பதிவிட்டு வந்தார். இதனால் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் ஹர்பஜனை தமிழ்ப் புலவர் என்று அழைத்து வந்தனர்.
இந்த நிலையில் ஹர்பஜனின் தமிழ் ட்வீட்டை நினைவுபடுத்தும் வகையில், "
விஷ் யு எ வெரி ஹாப்பி பர்த்டே, @harbhajan_singh! ஹவ் எ ப்ளாஸ்ட்” என்று பதிவிட்டிருக்கிறார்.
தற்போது சச்சினின் இந்த ட்வீட்தான் நெட்டிசன்களால் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
3-வது சீசன் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி 11-ல் தொடக்கம்: முதல் முறையாக வெளிமாநில வீரர்கள் பங்கேற்பு
தமிழ்நாடு பிரீமியர் கிரிக்கெட் லீக் (டிஎன்பிஎல்) தொடரின் 3-வது சீசன் போட்டிகள் திருநெல்வேலி இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன மைதானத்தில் ஜூலை 11-ம் தேதி தொடங்கவுள்ளன.
ஐபிஎல் பாணியில் கடந்த 2016-ம் ஆண்டு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டிஎன்பிஎல்) டி20 தொடர் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்நிலையில், 3-வது ‘சங்கர் சிமெண்ட் டிஎன்பிஎல்-2018’ போட்டிகள் வரும் ஜூலை 11-ம் தேதி தொடங்குகின்றன. சென்னை, திண்டுக்கல், திருநெல்வேயில் நடைபெறும் இந்த தொடர் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது.
திருநெல்வேலி சங்கர் நகர் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியுடன் மோதுகிறது.
8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் மொத்தம் 32 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. திருநெல்வேலி, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஆகிய இடங்களில் உள்ள மைதானங்களில் தலா 14 ஆட்டங்களும், சென்னையில் 4 ஆட்டங்களும் நடைபெற உள்ளன.
இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் எல்.சிவராமகிருஷ்ணன், வி.பி.சந்திரசேகர், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் (மார்க்கெட்டிங் பிரிவு) பி.ரமேஷ் ஆகியோர் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
3-வது சீசனில் பங்கேற்க உள்ள காரைக்குடி, மதுரை, தூத்துக்குடி அணிகளை புதிய உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர். அந்த அணிகளின் பெயர்களும் முறையே ஐடிரீம் காரைக்குடி காளை, சீசெம் மதுரை பாந்தர்ஸ், ஜோன்ஸ் டூட்டி பேட்ரியாட்ஸ் என மாற்றப்பட்டுள்ளன.
இத்தொடரின் அனைத்து ஆட்டங்களும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளன. மேலும், இந்த சீசனில் முதல்முறையாக பிற மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் இருவர் ஒவ்வொரு அணியிலும் விளையாட உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இவரை தெரியுமா?: பீட்டர் கெர்கர்
சர்வதேச சுற்றுலா நிறுவ னமான காக்ஸ் அண்டகிங்ஸ் நிறுவனத்தின் இந்திய தலைமைச் செயல் அதிகாரி.
1986-ம் ஆண்டில் மேலாளராக இந்த நிறுவனத்தில் இணைந்தவர். 1993-ம் ஆண்டில் இயக்குநர் குழுவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தியாவிலிருந்து லத் தீன் அமெரிக்கா, மத்திய ஆசியா, ஆப்பிரிக்கா, எகிப்து, சீனா நாடுகளுக்கான பல புதிய திட்டங்களை கொண்டு வந்தவர்.
8 பணியாளர்கள் 12 வாடிக்கையாளர்கள் மட்டுமே இருந்த இந்திய பிரிவை 6,500 பணியாளர்களுடன் இந்தியாவில் முதன்மை நிறுவனமாக உருவாக்கினார்.
மொரீஷியஸ் குபேர் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனம், இங்கிலாந்தின் கிளியர் மின், ஈடிஎன் சேவை, போல் ஷோய் எக்ஸ்பிரஸ் ஷிப்பிங் நிறுவனம், சி.கே இன்வெஸ்மெண்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் உள்ளார்.
ஸ்டேன்போர்டு பல்கலைக் கழகத்தில் பிஏ பட்டம் பெற்றவர்.
துணை நிறுவனங்களை விற்க ஏர் இந்தியா திட்டம்
ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விலக்கிக்கொள்ள மத்திய அரசு பலவிதமான வாய்ப்புகளை பரிசீலித்து வந்த நிலையில், தற்போது துணை நிறுவனங்களை முதலில் விற்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏர் இந்தியாவுக்கு ஐந்து துணை நிறுவனங்கள் உள்ளன. ஒவ்வொரு நிறுவனமாக விற்பது குறித்த பரிசீலனையில் மத்திய அரசு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. துணை நிறுவனங்களை விற்பதன் மூலம் கிடைக்கும் தொகை, ஏர் இந்தியாவை பலப்படுத்தும். இதன் மூலம் ஏர் இந்தியா பலமாகும், நிறுவனத்தின் மதிப்பும் உயரும் என அரசு உயரதிகாரி ஒருவர் கூறினார்.
பங்கு விலக்கல் தோல்வி
ஏர் இந்தியா பங்கு விலக்கல் முயற்சி தோல்வி அடைந்த பிறகு மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் ஜூன் 18-ம் தேதி ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் தற்காலிக நிதி அமைச்சர் பியுஷ் கோயல், விமான போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் நிதி மற்றும் விமான போக்குவரத்து துறை அமைச்சக அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் இந்த முடிவு குறித்து பரிசீலனை செய்யப்பட்டதாக தெரிகிறது.
கடன் ரூ.50,000 கோடி
மார்ச் 2017 வரையில் ஏர் இந்தியாவின் கடன் ரூ.50,000 கோடியாக உள்ளது. அரசின் பங்கு விலக்கலுக்கு பிறகு ரூ.33,000 கோடி கடன் ஏர் இந்தியா வசம் இருக்கும். ஏர் இந்தியாவின் கடன் காரணமாக எந்த நிறுவனங்களும் ஏர் இந்தியாவை வாங்குவதற்கு முன்வரவில்லை. அதனால் ஏர் இந்தியாவின் கடனை குறைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு எடுத்திருக்கிறது.
துணை நிறுவனங்களை விற்பதன் மூலம் கிடைக்கும் தொகை கடனை அடைக்க உதவும் என அரசு உயரதிகாரி கூறினார். தவிர பங்கு விலக்கல் அரசுக்கு முக்கியமானதாகும்.
நடப்பு நிதி ஆண்டில் பங்கு விலக்கல் மூலம் ரூ.80,000 கோடி திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறது. ஆனால் இதுவரை ரூ.434 கோடி மட்டுமே திரட்டப்பட்டிருக்கிறது. நிதிப்பற்றாக்குறை இலக்காக 3.3 சதவீதம் (ஜிடிபியில்) நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. நிதிப்பற்றாக்குறை இலக்கை அடைவதற்கு பங்கு விலக்கல் மூலம் நிதி திரட்டுவது அவசியமாகும்.
ஆன்லைன் ராஜா 33: உன் கண்ணில் நீர் வழிந்தால்....
பி
ரச்சினைகள் சிங்கிளாக வரும் சிங்கங்களல்ல, கூட்டமாகத்தான் வரும். வந்தன. வெளியுலக நெருக்கடிகள் போதாதென்று, கம்பெனிக்குள்ளும் குழப்பங்கள். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் ஃபிரீமான்ட் நகரத்தில், அலிபாபாவின் ஆய்வு & அபிவிருத்தி மையம் தொடங்கியிருந்தாரல்லவா? எதிர்பாராத பல நெருக்கடிகள். ஃப்ரீமான்டுக்கும், ஹாங்ஸெளவுக்கும் 15 மணிநேர கால வித்தியாசம். ஒருவர் வேலை பார்க்கும்போது அடுத்தவர் கும்பகர்ணனிடம் சரணடைந்திருப்பார். இரவினில் வேலை, பகலினில் தூக்கம் என்று பலர் உழைக்கவேண்டி வந்தது.
ஃபிரீமான்டில் இருந்த மையத் தலைவர் ஜான் வூ. அவருடனிருந்த 30 கம்ப்யூட்டர் திறமைசாலிகளுக்கும் சீன மொழி அரிச்சுவடி கூடத் தெரியாது. ஹாங்ஸெள, ஹாங்காங் பணியாளர்கள் ஆங்கிலம் பேசுவதில் ததிங்கிணத்தோம். சாதாரண உரையாடலிலேயே ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முடியவில்லை. இந்த அழகில், கம்ப்யூட்டர் தொழில் நுட்பப் பிரச்சினைகளை எப்படிப் புரிந்துகொண்டு வாடிக்கையாளர் சேவை தருவார்கள்? முடியவேயில்லை. கஸ்டமர்கள் குறைகள் குவிந்தன, தேங்கின. குழப்பம், குழப்பம்.
இத்தோடு, டாட்காம் குமிழி வெடிப்பால், பிசினஸ் தேக்கம். செலவைக் குறைத்தே ஆகவேண்டும். இது மருந்து கொடுத்துத் தீர்க்கும் நோயல்ல. அறுவை சிகிச்சை செய்யவேண்டிய வியாதி. ஜாக் எப்போதுமே ஜாலி மனிதர். மலைபோல் வரும் சிக்கல்களையும் சிரித்துக்கொண்டே சந்திப்பார். அவற்றைப் பனியாக மறையவைப்பார். அவரே இப்போது கலங்கினார். அலிபாபா நிலைக்க, அவரை நம்பியிருக்கும் ஊழியர் குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்காமலிருக்க, அமெரிக்காவின் 30 ஊழியர்களில் 15 பேரை நீக்கம் செய்யவேண்டிய கட்டாயம்.
ஜாக் மாவைப் பொறுத்தவரை, ஊழியர்கள் சம்பளத்துக்கு வேலை பார்க்கும் கொத்தடிமைகளல்ல. சொந்தங்கள். சீனாவிலிருந்து இ-மெயில் அனுப்பி அவர்களுக்குக் “குட் பை” சொல்லலாம். மனம் ஒத்துக்கொள்ளவில்லை. நேரடியாக அவர்களைச் சந்தித்துப் பேசவேண்டும், இதற்காகவே, அமெரிக்கா வந்தார். அவரோடு, அலிபாபாவின் பொதுஜனத் தொடர்பு வைஸ் பிரசிடென்ட் போர்ட்டர் எரிஸ்மேன் (Porter Erisman). அமெரிக்கர். புகழ்பெற்ற கெல்லாக் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்டில் (Kellogg School of Management) எம்.பி.ஏ. படித்தார். வித்தியாச அனுபவங்கள் தேடுபவர். அமெரிக்காவில் கிடைத்த பல வேலைகளை உதறிவிட்டுச் சீனா வந்தார். ஓகில்வி அன்ட் மாத்தெர் (Ogilvy & Mather) என்னும் விளம்பர நிறுவனத்தில் சேர்ந்தார். பல ஆன்லைன் கம்பெனிகளுக்கு விளம்பர ஆலோசனை தரும் வேலை. அங்கே இரண்டு வருடங்கள். சலிப்பு வந்தது. இன்டர்நெட் ஸ்டார்ட்-அப் கம்பெனிகளில் வாய்ப்புத் தேடினார். ஜாக் மாவைச் சந்தித்தார். சம்பிரதாயமான இன்டர்வியூ இல்லை. நட்பான உரையாடல். இருவருக்கும் ஒருவரையொருவர் பிடித்தது. அலிபாபாவின் பொதுஜனத் தொடர்பு வைஸ் பிரசிடென்ட் அப்பாயின்ட்டெட்.
எரிஸ்மேன் கம்பெனியின் ஆலோசனை அறைக்கு அனைத்து ஊழியர்களையும் வரச் சொன்னார். எதற்கு இந்தச் சந்திப்பு என்று அவர்களுக்கு எந்த முன்னறிவிப்பும் தரவில்லை. அதிர்ச்சி சேதியைத் தெரிவிக்கப்போகும் ஜாக் மா வயிற்றில் பட்டாம்பூச்சிகள் படபடத்தன.
மனதில் தயக்கம், குழப்பம். வார்த்தைகளில் தடுமாற்றம். எரிஸ்மேனிடம் சொன்னார், ``இன்றுவரை அலிபாபாவில் ஆட்களை அப்பாயின்ட் தான் செய்திருக்கிறோம். முதல்முறையாக நீக்கப்போகிறோம். சகோதர ஊழியர்களிடம் என்ன பேசவேண்டுமென்றே எனக்குத் தெரியவில்லை.”
வழக்கமான துள்ளல் நடை இல்லை. ஆலோசனை அறைக்கு வந்தார். பேசத் தொடங்கினார்.
“நீங்கள் அத்தனை பேரும் எத்தனை அர்ப்பணிப்போடு, கடுமையாக உழைக்கிறீர்கள் என்பது எனக்கும், சீனாவில் இருக்கும் அத்தனை பேருக்கும் தெரியும். அதையும் மீறி, உங்களுக்கு ஒரு கெட்ட செய்தியைச் சொல்ல வந்திருக்கிறேன். ஃப்ரீமான்டில் ஆட்குறைப்பு செய்யப்போகிறோம்.”
எல்லோரும் தலையைக் கவிழ்த்துக்கொண்டார்கள். ஜாக் மாவின் கண்களைச் சந்திக்க பயம். பலியாடுகளில் தான் ஒருவனாக இருக்கக் கூடாதே என்னும் மானசீக வேண்டுதல், வழிபாடு.
ஜாக் மா தொடர்ந்தார்.
“சில மாதங்களுக்கு முன்னால், அலிபாபாவின் இணையதளத்தை ஆங்கிலத்தில் தொழில்நேர்த்தியுடன் உருவாக்கும் குறிக்கோளுடன் இங்கே ஆய்வுமையம் தொடங்கினோம். ஆங்கில அறிவும், இன்டர்நெட் தொழில்நுட்பமும் கொண்டவர்கள் இங்கே, ஆங்கில இணையதளம் பயன்படுத்தும் கஸ்டமர்கள் இங்கே. எந்தக் கோணத்தில் சிந்தித்தாலும், அது சரியான முடிவாக அப்போது தோன்றியது. திரும்பிப் பார்க்கும்போது, அந்த முடிவால், தீர்வுகளைவிட அதிகமாகப் பிரச்சினைகள். முதல் பிரச்சினை, நம் இரு நாடுகளுக்கும் இருக்கும் நேர வித்தியாசம். இரண்டாவது. மொழிப் பிரச்சினை. அலிபாபா நமக்கு ஒரு கனவு. அதை நனவாக்க, நாம் சில யதார்த்தங்களை மறக்கக்கூடாது. இன்றைய ஆன்லைன் கம்பெனிகள் இருக்கும் நிலையில், இத்தனை ஆள் பலத்தோடு அமெரிக்காவில் மையம் நடத்துவது முடியாத காரியம். நாளை நாம் வளரவேண்டுமானால், இன்று ஆட்குறைப்பு செய்தேயாகவேண்டும்.
நான் ஆத்மசுத்தியோடு உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் என் மனமார்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். நடந்தவையெல்லாம், முழுக்க முழுக்க என் தவறு. வருங்காலத்தில், அலிபாபா ஆரோக்கிய நடை போடும்போது, நீங்கள் திரும்பி வரலாம். நாம் எல்லோரும் சேர்ந்து உழைத்து அலிபாபாவை உயர்த்தலாம்.”
ஜாக் மா சி.இ.ஓ. தன் செயலுக்கு அவர் இத்தனை விளக்கவுரை தரத் தேவையில்லை. தந்தார். ஏனென்றால், அவர் வெறும் முதலாளியில்லை, ஊழியர்கள் கண்களில் நீர் வழிந்தால், தன் நெஞ்சில் உதிரம் கொட்டும் ஈர மனசுக்காரர்.
சில நாட்களுக்குப் பின். எரிஸ்மேனுக்கு ஃபோன், மறுமுனையில் ஜாக் மா. அவர் குரலில் தடுமாற்றம். எரிஸ்மேன் என்னமோ, ஏதோ என்று பயந்தார்.
“எரிஸ்மேன், நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா?”
“தாராளமாக.”
”நான் கெட்டவனா எரிஸ்மேன்?”
”என்ன சொல்கிறீர்கள் ஜாக்?”
“ஏகப்பட்ட ஊழியர்கள் எனக்கு போன் செய்கிறார்கள். ஏன் இப்படிச் செய்துவிட்டாய் என்று கோபப்படுகிறார்கள். ஆட்குறைப்புச் செய்யும் நிலையை உண்டாக்கியது என் தவறுதான். இதனால், நான் கெட்டவன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?”
எரிஸ்மேனுக்கு அதிர்ச்சி. ஜாக் மா நல்லவர், நேர்மையானவர், நட்பையும், உறவையும் பெரிதும் மதிப்பவர் என்று தெரியும். ஆனால், அவருக்குள் இத்தனை மென்மையா? அலெக்சாண்டர், செங்கிஸ்கான், ஜூலியஸ் சீஸர், நெப்போலியன் உலகம் சந்தித்திருக்கும் மாவீரர்கள், மகா தளபதிகள். அன்றாட வாழ்க்கையில் உறவுகள், நண்பர்களிடம் பாசமும், அன்பும் காட்டியவர்கள். ஆனால், யுத்தங்களுக்கு வரும்போது சொந்த உணர்வுகளை ஓரம்கட்டி வைத்துவிட்டு வருவார்கள். எதிரிகளை ஈவு இரக்கம் இல்லாமல் கொன்று குவிப்பார்கள். வரலாற்றுப் பக்கங்களில் அவர்கள் நிரந்தர இடம் பிடித்திருப்பதற்குக் காரணம் இந்தப் போர்க்குணம்.
பிசினஸ் நவீனகால யுத்தம். இந்த யுத்தத்தில். அலெக்சாண்டர், செங்கிஸ்கான், ஜூலியஸ் சீஸர், நெப்போலியன் ஆகியோருக்கு ஒப்பானவர் ஜாக் வெல்ஷ் (Jack Welch). உலக மேனேஜர்களுக்கு வழிகாட்டி 1981 முதல் 2001 வரை, இருபது ஆண்டுகள் அமெரிக்க ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தலைவராக இருந்தார். 1981 – இல், கம்பெனி தள்ளாடிக்கொண்டிருந்தது. சந்தை மதிப்பு 14 பில்லியன் டாலர்கள். ஐந்தே வருடங்களில் லாபம் காட்டினார். 2001 – இல் தலைமைப் பதவியிலிருந்து இறங்கியபோது, சந்தை மதிப்பு 400 பில்லியன் டாலர்கள்.
ஜாக் வெல்ஷ் நிர்வாகத்தின் முக்கிய அம்சம், அவர் செயல்படுத்திய 20-70-10 முறை. அவரே இதை விளக்குவார், “உங்கள் ஊழியர்களில் தலைசிறந்த 20 சதவிகிதம் பேரைச் செல்லப் பிள்ளைகளாக நடத்தவேண்டும்; அடுத்த வரிசையில் இருக்கும் 70 சதவிகிதம் பேரின் திறமைகளைப் பயிற்சிகள் மூலம் பட்டை தீட்டி, டாப் 20 சதவிகிதத்துக்குக் கொண்டுபோக வேண்டும்; அடிமட்ட 10 சதவிகிதம் பேரை வேலையிலிருந்து துரத்தவேண்டும். இது தோட்டத்தில் களையெடுப்பது மாதிரி. ” ஜாக் வெல்ஷ் இப்படிச் சீட்டுக் கிழித்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்துப் பன்னிரெண்டாயிரம்!
ஜாக் வெல்ஷின் 20-70-10 தந்த பலன் நம் எல்லோருக்கும் பாடம். ஊழியர்களிடம் அன்போடு, பாசத்தோடு பழகலாம். ஆனால், கம்பெனியின் வருங்காலமே கேள்விக்குறியாக இருக்கும் தருணங்களில் மகாபாரத அர்ஜூனனாக உடல் நடுங்கி, வாய் உலர்ந்து, காண்டீபம் கை நழுவ நிற்கக்கூடாது. இதயத்தை இரும்பாக்கிக்கொண்டு கசப்பான முடிவுகள் எடுக்கவேண்டும். தான் கம்பெனிக்குத் தருவது விஷமல்ல, கசப்பு மருந்து என்னும் தெளிவு வேண்டும். இதில் தடுமாறும்போது, அந்தத் தலைவர் மதிக்கும் நண்பர்கள் அவருக்கு ஊக்கமாத்திரை தரவேண்டும். எரிஸ்மேன் தந்தார்.
”ஜாக் மா, எதைச் செய்யவேண்டுமோ, அதைத்தான் நீங்கள் செய்திருக்கிறீர்கள். பதினைந்து பேரை வேலையைவிட்டு நீக்கி, ஆயிரத்துக்கும் அதிகமானோரின் வருங்காலத்தைக் காப்பாற்றியிருக்கிறீர்கள்.”
”நன்றி எரிஸ்மேன். உங்கள் கணிப்பு சரியாக இருக்கட்டும்.”
எரிஸ்மேன் பேச்சு ஜாக் மாவுக்குத் தெம்பு தந்தது. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்று அலிபாபாவின் பிற பிரச்சினைகளில் கவனம் காட்டினார். அவற்றுக்கா பஞ்சம்? ஆயிரம், ஆயிரமாய்ப் பூச்சாண்டி காட்டின.
(குகை இன்னும் திறக்கும்)
slvmoorthy@gmail.com
இவரை தெரியுமா?- அஸ்வின் பண்டாரி
ஐ வூமி ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் இந்திய தலைமைச் செயல் அதிகாரி. 2017-ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து இந்த பொறுப்பில் உள்ளார்.
2016-ம் ஆண்டிலிருந்து சீனாவில் உள்ள சன்டெக்ஸ் எலெக்ட்ரானிக்ஸ் குழுமத்தின் இயக்குநர் குழு உறுப்பினராகவும் உள்ளார்.
ஸ்வைப் டெலிகாம் நிறுவனத்தில் உத்திகள் மற்றும் புராடக்ட் பிரிவு துணைத் தலைவராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
ஷென்ஸென் லீகியர் நிறுவனத்தில் துணைத் தலைவர், பியாண்ட் டெக் நிறுவனத்தின் வர்த்தகத் துறை தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
நாக்பூர் பல்கலைக் கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றவர். சிம்பியாசிஸ் பல்கலைக் கழகத்தில் மேலாண்மை உயர் கல்வி முடித்துள்ளார்.
நடப்பாண்டில் இந்திய சந்தையில் ஐ வூமி ஸ்மார்ட்போன் விற்பனை ரூ.500 கோடிக்கு இலக்கு வைத்துள்ளார்.
டாடா சன்ஸ் - மிஸ்திரி வழக்கில் 9-ம் தேதி தீர்ப்பு
டாடா சன்ஸ் மற்றும் சைரஸ் மிஸ்திரி இடையேயான வழக்கின் தீர்ப்பு வரும் 9-ம் தேதி அறிவிக்கப்படும் என தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (என்சிஎல்டி) அறிவித்திருக்கிறது. நேற்று தீர்ப்பு வெளியிடப்படுவதாக இருந்தது. ஆனால் தீர்ப்பில் சில திருத்தங்கள் செய்ய இருப்பதால் வரும் 9-ம் தேதி தீர்ப்பு வெளியிடப்படும் என ஆணையத்தின் நீதிபதிகள் அறிவித்திருக்கிறார்கள்.
டாடா சன்ஸ் தலைவர் பொறுப்பில் இருந்த சைரஸ் மிஸ்திரி கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ம் தேதி அதிரடியாக நீக்கப்பட்டார். இவர் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக டாடா சன்ஸ் இயக்குநர் குழு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து டாடா சன்ஸ் குழுமத்துக்கும், சைரஸ் மிஸ்திரிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் ரத்தன் டாடாவின் தலையீடு இருந்ததாக சைரஸ் மிஸ்திரி குற்றம் சாட்டினார். சிறு முதலீட்டாளர்களுக்கு எதிராக டாடா சன்ஸ் விதிமுறைகள் இருப்பதாகவும் மிஸ்திரி கூறினார். மிஸ்திரி வெளியேற்றத்துக்கு பிறகு டாடா சன்ஸ் விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டது கவனிக்கத்தக்கது.
இதனைத் தொடர்ந்து கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் என்சிஎல்டியில் மிஸ்திரி வழக்கு தொடுத்தார். 2017-ம் ஆண்டு தொடக்கத்தில் மிஸ்திரியின் வழக்கினை என்சிஎல்டி தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதன் பிறகு இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 2017 அக்டோபர் முதல் 2018 பிப்ரவரி வரையில் விசாரணை நடைபெற்றது.தற்போது தீர்ப்பு வெளியாக இருக்கிறது. டாடா சன்ஸ் குழுமத்தில் மிஸ்திரி குடும்பத்துக்கு 18 சதவீத பங்குகள் உள்ளன. 2012-ம் ஆண்டு டிசம்பரில் அப்போதைய தலைவர் ரத்தன் டாடாவுக்கு 70 வயதானதைத் தொடர்ந்து, சைரஸ் மிஸ்திரி டாடா சன்ஸ் தலைவராக பொறுப்பேற்றார். பதவி ஏற்ற நான்கு ஆண்டுகளில் அவர் நீக்கப்பட்டார்.
சுங்க கட்டணம் ரத்து இல்லை: கட்கரி அறிவிப்பு
தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டண வசூலை ரத்து செய்ய முடியாது என மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். சிறந்த சேவையை அளிக்க மக்கள் இந்த கட்டணத்தை அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
சுங்க கட்டணத்தை ரத்து செய்தால், சாலைகளை உருவாக்கி பராமரிப்பது திட்டத்தின் கீழ் (பிஓடி) சாலைக் கட்டுமான திட்டங்களுக்கான நிதி கிடைக்காது. இதனால் சுங்கக் கட்டணத்தை நீக்குவது சாத்தியமில்லை என்றார்.
2017-ம் ஆண்டில் நெடுஞ்சாலைகளில் நடைபெற்ற 4.60 லட்சம் விபத்துகளில் 1.46 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். நெடுஞ்சாலை விபத்துகளை குறைப்பற்கான நடவடிக்கைகளை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது என்றும் அமைச்சர் கூறினார்.
ஐபிஓ மூலம் ரூ.3,250 கோடி திரட்ட திட்டம்
நான்கு நிறுவனங்கள் ஐபிஓ வெளியிட விண்ணப்பம் அளித்துள்ளன. இந்த ஐபிஓ மூலம் ரூ.3,250 கோடி திரட்ட இலக்கு வைத்துள்ளன.
தி லலித் என்கிற பெயரில் ஹோட்டல் சேவையில் உள்ள பாரத் ஹோட்டல்ஸ் நிறுவனம், மருத்துவ சேவையில் உள்ள சேலெட் ஹோட்டல்ஸ், ஆன் லைன் நிறுவனமான இந்தியா மார்ட் மற்றும் விவசாய கருவிகள் தயாரிப்பு நிறுவனமான மில்டெக் மெசினரி ஆகிய நான்கு நிறுவனங்களும் பொதுப் பங்கு வெளியிட விண்ணப்பித்துள்ளன. இந்த நான்கு நிறுவனங்களும் மொத்தம் ரூ 3,250 கோடியை திரட்ட உள்ளன.
பாரத் ஹோட்டல்ஸ் ரூ 1,200 கோடியும், சேலெட் ஹோட்டல்ஸ் ரூ.950 கோடியும், இந்தியா மார்ட் நிறுவனம் ரூ. 600 கோடியும், மில்டெக் மெசினரி ரூ. 500 கோடியும் திரட்ட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இவை மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்கு சந்தையிலும் பட்டியலிடப்படும்.
தங்கம் பவுனுக்கு ரூ.80 குறைவு
சென்னையில் தங்கத்தின் விலை நேற்று ஒரு பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.23 ஆயிரத்து 224-க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் 2,903-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சர்வதேச அளவில் தங்கத்தின் விலை நேற்று சிறிய அளவில் குறைந்துள்ளது. சென்னையில் நேற்று பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.23 ஆயிரத்து 224-க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.2 ஆயிரத்து 903-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.2 ஆயிரத்து 913-க்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி: இந்தியாவுக்கு நவம்பர் 4-ம் தேதி இறுதி கெடு- முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என அமெரிக்கா நெருக்குதல்
ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நவம்பர் 4-ம் தேதிக்குள் முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்று இந்தியாவுக்கு அமெரிக்கா இறுதி கெடு விதித்துள்ளது. இராக் மற்றும் சவூதி அரேபியாவுக்கு அடுத்த படியாக ஈரானிலிருந்து மிக அதிக அளவில் இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறது.
கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், 2015-ம் ஆண்டு ஈரானுடன் போடப்பட்ட அணு ஒப்பந்தத்தை விலக்கிக் கொள்வதாக அறிவித்தார். அத்துடன் ஈரானுக்கெதிராக பொருளாதார தடைகளை அமெரிக்கா மேற்கொள்ளும் என அறிவித்தார்.
அந்த சமயத்தில் ஈரானுடன் எத்தகைய தொழில் ரீதியான தொடர்புகளை வைத்துள்ள நிறுவனங்களும் அதை 180 நாள்களுக்குள் முடித்துக் கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
பொருளாதார தடை விதிக்கப்பட்டதால், ஈரானிலிருந்து பிற நாடுகள் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தும் நடவடிக்கைகளில் அமெரிக்கா இறங்கியுள்ளது. இதன்படி ஈரானிலிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் நாடுகளான இந்தியா மற்றும் சீனா உள்ளிட்டவை நவம்பர் 4-ம் தேதிக்குள் முழுமையாக நிறுத்த வேண்டும் என்று வாஷிங்டன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் ஈரானுடனான தொடர்புகளை முற்றிலுமாக நிறுத்திக் கொண்ட நாடுகளுடன் அந்நாட்டின் தேவைகளுக்கேற்ப அவற்றுடன் அமெரிக்கா பேச்சு நடத்தி வருகிறது. அதேபோல ஈரானிலிருந்து ஓரளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தாலும் அந்த நாடுகளுக்கு பகுதியளவில் சலுகை அளிப்பதில்லை என்ற முடிவையும் அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஈரானுக்கெதிராக விதிக்கப்பட்ட பொருளாதார தடையில் ஓரளவு கூட விலக்கோ அல்லது சிறப்பு அனுமதியோ அளித்தால், தடை விதித்து நெருக்குதல் ஏற்படுத்துவதில் பயன் இருக்காது. இதனால் முற்றிலுமான தடையை செயல்படுத்த அமெரிக்கா முனைப்பு காட்டி வருவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதை வெளியுறவுத்துறை கொள்கை மற்றும் திட்டமிடல் துறையின் இயக்குநர் பிரையன் ஹூக்கும் உறுதி செய்துள்ளார்.
ஈரானுக்கெதிரான தடையை முழுவதுமாக அமல்படுத்த வேண்டும். தேசிய பாதுகாப்பு இலக்கை எட்டவேண்டுமெனில் இத்தகைய தடை அவசியம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஈரானுக்கெதிரான அமெரிக்காவின் பொருளாதார தடையின் முதல் கட்டம் ஆகஸ்ட் 6 முதல் அமல்படுத்தப்படும். இந்த தடை விதிப்பானது ஆட்டோமொபைல், தங்க வர்த்தகம் மற்றும் முக்கிய உலோகங்கள் மீதானதாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
இரண்டாம் கட்ட தடை நவம்பர் 4-ம் தேதி முதல் அமலுக்கு வரும். இது ஈரானின் எரிசக்திக்கெதிரானதாகும். அதாவது பெட்ரோலியம் சார்ந்த கச்சா எண்ணெய் வர்த்தகம் தொடர்பானது மற்றும் ஈரானின் மத்திய வங்கியுடனான தொடர்பை முற்றிலுமாக துண்டிப்பதாகும் என்று ஹூக் கூறினார்.
ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதியைக் குறைத்துள்ள நாடுகளைப் பற்றிய விவரங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. எந்த ஒரு நாட்டுக்கும் சலுகையோ அல்லது சிறப்பு அனுமதியோ அளிக்கப்பட மாட்டாது, இதில் இந்தியா அல்லது துருக்கி என்ற எந்த பாகுபாடும் கிடையாது என்றார்.
ஈரானுடனான அணு ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் திரும்பப் பெற்ற பிறகு, முக்கியமான நாடுகளின் தலைநகருக்கு ஹூக் பயணம் மேற்கொண்டு அதிபரின் திட்டத்தை தெரிவித்து ஈரானுக்கெதிரான தடை விதிப்புக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கோரிக்கை விடுத்து வருகிறார்.
பெரும்பாலான நாடுகள் தீவிரவாதத்துக்கு எதிராக தங்களது ஒத்துழைப்பை அளிப்பதாக கருத்து தெரிவித்ததோடு மத்திய கிழக்கு பகுதியில் அமைதி நிலவ வேண்டும் என்பதை விரும்புகின்றன. இத்தகைய நாடுகளுடன் இணைந்து சர்வதேச அளவில் ஈரானுக்கெதிரான தடையை செயல்படுத்த உள்ளதாக ஹூக் குறிப்பிட்டார்.
ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலை முற்றிலுமாக இல்லாத நிலைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. விரைவிலேயே இந்த இலக்கை எட்டுவோம். அதேசமயம் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் பாதிப்படையாமல் இருப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
வங்கி சார்ந்த நடவடிக்கை நவம்பர் 4-ம் தேதி முதல் மேற்கொள்ளப்படுவதால் அதற்குப் பிறகு ஈரானுக்கு அமெரிக்க டாலர் கிடைக்காத சூழல் உருவாக்கப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பட்டியலிடப்பட்ட 222 நிறுவனங்களை நீக்க பிஎஸ்இ முடிவு
பட்டியலிடப்பட்ட 222 நிறுவனங்களை சந்தையில் இருந்து நீக்குவதற்கு மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) முடிவு செய்திருக்கிறது. இந்த பங்குகள் கடந்த ஆறு மாதமாக வர்த்தகமாகாமல் இருப்பதால் பிஎஸ்இ இந்த முடிவினை எடுத்திருக்கிறது.
போலி நிறுவனங்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்து வரும் சூழலில் பிஎஸ்இ இந்த முடிவினை எடுத்திருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 331 போலி நிறுவனங்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. மேலும் செயல்படாத 2 லட்சம் நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டன.
ஜூலை 4-ம் தேதி முதல் 210 பங்குகள் நீக்கப்படுகின்றன என பிஎஸ்இ தன்னுடைய செய்தி குறிப்பில் தெரிவித்திருக்கிறது. தவிர ஏசியன் எலெக்ட்ரானிக்ஸ், பிர்லா பவர் சொல்யூஷன்ஸ், கிளாசிக் டைமண்ட்ஸ் (இந்தியா), இன்னோவேட்டிங் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட ஆறு நிறுவனங்களை என்எஸ்இ தன்னுடைய சந்தையில் இருந்து இதர காரணங்களுக்காக நீக்கி இருக்கிறது. இந்த பங்குகளையும் பிஎஸ்இ நீக்குவதாக அறிவித்திருக்கிறது.
வர்த்தகமாகாமல் இருப்பதை தவிர இதர காரணங்களுக்காக சந்தையில் இருந்து நீக்கப்படும் நிறுவனங்களின் நிறுவனர்கள், இயக்குநர்கள் அடுத்த 10 ஆண்டுகளுக்கு பங்குச்சந்தையில் நிதி திரட்ட முடியாது.
பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் வசம் உள்ள பங்குகளை திரும்ப வாங்கிக்கொள்ள வேண்டும். பங்குச் சந்தை அமைக்கும் குழு பரிந்துரை செய்யும் விலையில் இந்த பங்குகள் திரும்ப வாங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.
மேலும் ஆறு நிறுவனங்கள் ஆறு மாதங்களுக்கு மேலாக வர்த்தகமாகாமல் உள்ளன. இந்த பங்குகளும் இன்று முதல் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட் டிருக்கிறது.
முன்னதாக 200-க்கும் மேற்பட்ட பங்குகள் கடந்த ஆறு மாதமாக வர்த்தகமாகாமல் இருப்பதாக கடந்த மே மாதம் பிஎஸ்இ அறிவித்தது.
ரூபாய் மதிப்பு சரிவால் கவலையடைய தேவையில்லை: நிதி ஆயோக் துணைத் தலைவர் தகவல்
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவடைந்து வருகிறது. ஆனால் இதனால் கவலையடைய தேவையில்லை என நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.
சர்வதேச சூழல், பணவீக்கம் உள்ளிட்ட பல காரணங்களால் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 69 ரூபாய் அளவில் வர்த்தகமாகி வருகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் ஒரு டாலர் 57 ரூபாயில் இருந்து 68 ரூபாய் வரை மூன்று மாதங்களில் சரிவடைந்தது. அதனால் தற்போது ரூபாய் மதிப்பு சரிவை ஒப்பிடுவது சரியானது அல்ல. இதர முக்கியமான நாடுகளின் நாணய மதிப்பை விட ரூபாய் மதிப்பு உயர்வடைந்திருக்கிறது. அதனால் கவலைப்பட தேவையில்லை. ரூபாய் மதிப்பை குறிப்பிட்ட எல்லைக்குள் வைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி இலக்கு ஏதும் நிர்ணயம் செய்யவில்லை.
நடப்பு நிதி ஆண்டு வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும். அதேபோல அடுத்த நிதி ஆண்டு வளர்ச்சி 8 % அளவில் இருக்கும். 2022-ம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 8.5 % என்னும் அளவில் இருக்கும். அதனை தொடர்ந்து இதே நிலையில் பொருளாதார வளர்ச்சி இருக்கும்.
கடந்த நான்கு ஆண்டுகளில் பல சீர்த்திருத்தங்களை அரசு கொண்டு வந்திருக்கிறது. இதற்கு முன்பு இருந்த அரசாங்கங்கள் இவ்வளவு சீர்த்திருத்தங்களை கொண்டு வந்ததில்லை என்றும் ராஜீவ் குமார் கூறினார்.
இவரை தெரியுமா?: ஜெஃப்ரே கேம்பெல்
அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி. 2013-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் இந்தப் பொறுப்பில் இருந்துவருகிறார்.
அமெரிக்க மருந்து விற்பனை நிறுவனமான மெக்கெசன் கார்ப்பரேஷனின் துணைத் தலைவராகவும், தலைமை நிதி அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.
டெலாய்ட் நிறுவனத்தில் கணக்குப் பதிவாளராக தனது பணி வாழ்க்கையைத் தொடங்கியவர்.
பசை தயாரிப்பு நிறுவனமான ஹெக்செல் கார்ப்பரேஷனின் அன்றாட அலுவல்கள் இல்லாத இயக்குநராக செயல்பட்டு வருகிறார்.
ஸ்டான்ஃபோர்டு பல்கலைகழகத்தில் வணிகவியல் பட்டமும், ஹார்வர்டு பல்கலைகழகத்தில் மேலாண்மை பட்டமும் பெற்றவர்.








