அமெரிக்க பொருட்களுக்கு வரியை உயர்த்தி கனடா பதிலடி

அமெரிக்க பொருட்களுக்கு வரியை உயர்த்தி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ ட்ரம்புக்கு பதிலடி அளித்திருக்கிறார்.

கனடா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் மற்றும் ஜெர்மனி நாடுகள் உள்ளடக்கிய ஜி 7 உச்சி மாநாடு கனடாவின் கியூபெக்கில் லமாவ்பே நகரில் கடந்த மாதம் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ வர்த்தக வரிவிதிப்பு விவகாரத்தில் நேர்மையற்று நடந்து கொள்கிறார் என்று கூறி ஜி 7  மா நாட்டின் முடிவில் வழக்கப்பட்ட கூட்டு அறிக்கைக்கான ஆதரவை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திரும்பப் பெற்றார்.

மேலும் அதனைத் தொடர்ந்து கனடா, மெக்சிகோ நாடுகளின் இறக்குமதி வரியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உயர்த்தினார். இதற்கு பதிலடி அளிக்கும் வகையில் அமெரிக்க பொருட்களுக்கு இறக்குமதி வரி உயர்த்தப்படும் என்று ஜஸ்டின் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கனடாவுக்கு அமெரிக்கவிலிருந்து  இறக்குமதியாகும் இரும்புப் பொருட்களுக்கு ஐஸ்டின் இறக்குமதி வரியை 25% உயர்த்தி இருக்கிறார். மேலும் பிட்ஸாவுக்கு 12% டிடர்ஜெண்ட் 10 % சதவீதமும் அதிகரித்திருக்கிறார்.

வர்த்தக வரிவிதிப்பில் கனடா பிரதமர் ஜஸ்டின் எங்களது முதிகில் குத்திவிட்டார்.  உள் நாட்டு லாபத்திற்காக முதிர்ச்சியற்ற அரசியலை செய்துவிட்டார் என்று அமெரிக்கா குற்றம் சாட்டியிருந்தது. இந்த நிலையில் ஜஸ்டின் அமெரிக்க பொருட்களுக்கு வரி உயர்த்தி இருக்கிறார்.

Share:

No comments:

Post a Comment