பாகிஸ்தானில் வரும் 25-ல் பொதுத்தேர்தல் 849 இடங்களுக்கு 11,800 பேர் போட்டி
பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேசிய அவை (மக்களவை) மற்றும் 4 மாகாண சட்டப்பேரவைகளுக்கு வரும் 25-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 849 பொது இடங்களுக்கு 11,800-க்கும் மேற்பட்டோர் போட்டியிடுகின்றனர்.
பாகிஸ்தான் தேர்தல் ஆணையம், இறுதி வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது. இதன்படி, நாடாளுன்ற தேசிய அவையில் மொத்தமுள்ள 272 பொது இடங்களுக்கு 3,459 பேரும் 4 மாகாண சட்டப்பேரவைகளின் 577 பொது இடங்களுக்கு 8,396 பேரும் போட்டியிடுகின்றனர்.
மொத்தம் 342 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய அவையில் 272 பேர் மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த அவையில் 60 இடங்கள் பெண்களுக்கும் 10 இடங்கள் மத சிறுபான்மையினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
கடந்த 2013-ல் தேசிய அவை மற்றும் 4 மாகாண சட்டப்பேரவைகளுக்கு நடந்த தேர்தலில் மொத்தம் 15,629 பேர் போட்டியிட்ட நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. வரும் தேர்தலில் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் தேசிய அவைக்கு போட்டியிடுகின்றனர். - பிடிஐ
No comments:
Post a Comment