அமர்நாத் யாத்திரையில் நிலச்சரிவில் சிக்கி 3 பக்தர்கள் உயிரிழப்பு
அமர்நாத் யாத்திரையின்போது நிலச்சரிவில் சிக்கி 3 பக்தர்கள் உயிரிழந்தனர். மாரடைப்பு காரணமாக ஒருவர் உயிரிழந்தார்.
காஷ்மீர் மாநிலம் அமர்நாத் தில் உள்ள பனி லிங்கத்தை தரிசிப்பதற்கான அமர்நாத் யாத்திரை கடந்த 27-ம் தேதி தொடங்கியது. பல்டால் மற்றும் பஹல் காம் பாதைகள் வழியாக அமர்நாத்துக்கு பக்தர்கள் செல்கின்றனர். கடந்த சில நாட்களாக காஷ்மீரில் பரவலாக மழை பெய்வதால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாலை பல்டால் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி டெல்லியைச் சேர்ந்த ஷைலேந்திரா (30), ஜோதி ஷர்மா (35), பிஹாரைச் சேர்ந்த அசோக் மடோ (51) ஆகி யோர் இறந்தனர். மேலும் 5 பக்தர்கள் காயமடைந்தனர்.
இதனிடையே குஜராத்தைச் சேர்ந்த நானிபென் பார்மா (60) என்பவர் நேற்று முன்தினம் மாலை பஞ்ச்தர்ணி முகாமில் மாரடைப்பால் காலமானார்.
இதுவரை நிலச்சரிவு மற்றும் மாரடைப்பால் இறந்த பக்தர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையே, 3,708 பக்தர்களைக் கொண்ட 7-வது குழு நேற்று அமர்நாத் புறப்பட்டுச் சென்றது.
No comments:
Post a Comment