சோனாலி பிந்த்ரே புற்றுநோயால் பாதிப்பு: நியூயார்க்கில் சிகிச்சை பெறுகிறார்

பிரபல நடிகை சோனாலி பிந்த்ரே பல்வேறு இந்திப் படங்களில் நடித்து புகழ் பெற்றவர். தமிழில் ‘காதலர் தினம்’ படத்தில் நடித்துள்ளார். அப்படத்தில் வரும் ‘என்ன விலை அழகே..’ பாடலில் சோனாலி பிந்த்ரேயின் நடனம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. 43 வயதாகும் அவர் தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்காக அமெரிக்காவில் நியூயார்க்கில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டர் பதிவில் சோனாலி பிந்த்ரே, ‘‘உடலில் ஏற்பட்ட வலி காரணமாக மருத்துவரை சந்தித்தேன். சில பரிசோதனைகளை எடுத்துக் கொண்டேன். அதன் முடிவில் நான் தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். உறவினர்களும், நண்பர்களும் எனக்கு உறுதுணையாக இருந்து வருகின்றனர். புற்றுநோயுடன் போராடி விரைவில் குணமடைவேன் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Share:

No comments:

Post a Comment