தமிழ், சமஸ்கிருதம் இந்தியாவின் கண்கள்: வைரமுத்து கருத்து
தமிழும் சமஸ்கிருதமும் இந்தியாவின் இரு கண்கள் என்று கவிஞர் வைரமுத்து கூறினார்.
தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: இந்தியா, இரண்டு மொழிகளின் கலாச்சாரத்தால் ஆனது என்பது மொழியியல் அறிஞர்களின் கூற்று. தெற்கே தமிழ், வடக்கே சமஸ்கிருதம் என இவ்விரு மொழிகளும் இந்தியாவின் இரு கண்கள் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
சமஸ்கிருதத்தை வாழும் மொழி என்று சொல்ல முடியாது என்றாலும் வாசிக்கத்தக்க மொழி. வாழும் மொழியாகவும், வாசிக்கும் மொழியாகவும் உள்ளது தமிழ். தமிழைக் கழித்து விட்டால், இந்தியாவும் கழிந்து போகும் என்பதை மத்தியில் ஆள்வோர் உணர வேண்டும். தமிழோடு சேர்ந்துதான் இந்தியாவின் ஒருமைப்பாடு, நாகரிகம் உள்ளது என்பதை அவர்கள் உணர வேண்டும்.
தண்ணீர்தான் மூன்றாம் உலகப் போருக்கு காரணமாகப் போகிறது என்று கூறுகின்றனர். அது, இந்தியாவில் இருந்து தொடங்கிவிடக் கூடாது என்றார்.
No comments:
Post a Comment