நடப்பு நிதி ஆண்டில் நிதிப் பற்றாக்குறை குறையும்: நிதி அமைச்சர் பியுஷ் கோயல் நம்பிக்கை

நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் நிதிப் பற்றாக்குறை நிர்ணயிக்கப்பட்ட இலக்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அளவை விட குறைவாக இருக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் பியுஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டதைப் போல நிதிப் பற்றாக்குறை இலக்கு கட்டுப்படுத்த முடியாது என்ற தோற்றம் பொதுவாக ஏற்பட்டுள்ளது. ஆனால் பற்றாக்குறை அளவு நிர்ணயிக்கப்பட்டதை விட குறையும் என்று தான் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

2017-18-ம் நிதி ஆண்டில் பட்ஜெட் பற்றாக்குறை 3.53 சதவீதமாகவும் நடப்பு நிதி ஆண்டில் (2018-19) 3.30 சதவீதமாகவும் குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் அரசின் செலவு ரூ. 3.45 லட்சம் கோடியாகும். இந்த அளவானது 2018-19-ம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தொகையில் 55.3 சதவீதமாகும்.

கடந்த நிதி ஆண்டில் (2017-18) ஏப்ரல், மே மாதங்களில் இது 68.3 சதவீதமாக இருந்தது. ஆண்டின் இறுதியில் ஜிஎஸ்டி வருமானம் ரூ 13 லட்சம் கோடியாக இருந்தது. -பிடிஐ

Share:

No comments:

Post a Comment