விரலை காட்டி செல்பி எடுப்பது ஆபத்தானது: ஐபிஎஸ் அதிகாரி ரூபா எச்சரிக்கை
விரல்களைக் காட்டி செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவது ஆபத்தானது. சைபர் கிரைம் குற்றவாளிகள் அதனை தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது என ஐபிஎஸ் அதிகாரி ரூபா எச்சரித்துள்ளார்.
பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு வழங்கப்படும் சலுகைகளை அம்பலப்படுத்தியவர் ஐபிஎஸ் அதிகாரி ரூபா. இந்நிலையில் செல்பி புகைப்படங்கள் குறித்து ரூபா பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ரூபா கூறியிருப்பதாவது:
கை விரல்களைப் பலவிதமாக காட்டியவாறு எடுக்கும் செல்பி படங்களை ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியிடுகின்றனர். இது மிகவும் ஆபத்தானது. இந்த புகைப்படங்களைக் கொண்டு கைரேகையை திருடும் வேலையில் சைபர் கிரைம் ஹேக்கர்கள் ஈடுபட்டுள்ளனர். செல்பி படத்தில் உள்ள கை விரல்களை பெரிதாக்கி ஸ்கேன் செய்து, கை ரேகையை எடுக்கிறார்கள். இதைக்கொண்டு பெரிய அளவில் மோசடிகளை செய்கிறார்கள். எனவே தயவுசெய்து கைரேகை தெரியும்படி புகைப்படம் போட வேண்டாம்.
இவ்வாறு ரூபா கூறியுள்ளார்.
“சினிமா மேஜிக்னு சொல்லி மக்களை ஏமாற்ற முடியாது” - கவுதம் கார்த்திக்
No comments:
Post a Comment