ட்ரம்ப்புக்கு எதிராக சுதந்திர தேவி சிலையின் மீது ஏறி பெண் போராட்டம்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் குடியேற்றக் கொள்கையை எதிர்த்து பெண் ஒருவர் சுதந்திர தேவி சிலையின் மீது ஏறி போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ட்ரம்ப்பின் குடியேற்றக் கொள்கையால் மெக்சிகோவிலிருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைபவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் 2 ஆயிரம் குழந்தைகள் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டனர்.
இந்த விவகாரம் சர்வதேச அளவில் விமர்சிக்கப்படவே சட்டவிரோதமாக நுழையும் அகதிகளிடம் இருந்து அவர்களின் குழந்தைகளைப் பிரித்து காப்பகத்தில் தங்கவைக்கும் திட்டத்தை டெனால்ட் டிரம்ப் ரத்து செய்தார்.
இந்த நிலையில் ட்ரம்ப்பின் குடியேற்றக் கொள்கை மற்றும் சுங்க அமலாக்கத்துறைக்கு எதிராகப் பெண் ஒருவர் புதன்கிழமை அமெரிக்காவின் நியூயார்க் துறைமுகத்தில் அமைந்துள்ள பிரசித்து பெற்ற சுதந்திர தேவி சிலையின் மீது ஏறி தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார்.
3 மணி நேரத்துக்கு மேலாக அப்பெண் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், போலீஸார் அப்பெண்ணுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து அவர் கீழே இறங்கினார். அப்பெண்ணைக் கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகள் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அப்பெண் கோரிக்கை விடுத்ததாக நியூயார்க் போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தால் நியூயார்க் துறைமுகத்தில் பரப்பரப்பு நிலவியது.
No comments:
Post a Comment