தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்

ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான நாட்கள் 60-ல் இருந்து மீண்டும் 120 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளன. அதன்படி, 120 நாட்களுக்கு முன்பே விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.

தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 6-ம் தேதி (செவ்வாய்) வருகிறது. நவம்பர் 5-ம் தேதி (திங்கள்) ஒரு நாள் மட்டும் விடுப்பு எடுத்துக் கொண்டு வெள்ளிக்கிழமையே (நவம்பர்.2) சொந்த ஊருக்குச் செல்ல திட்டமிட்டுள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், இன்று அதற்கான ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்துகொள்ளலாம்.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ரயில் பயணத்துக்கு 120 நாட்களுக்கு முன்பே விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். அதன்படி நவம்பர் 2-ம் தேதி (வெள்ளிக்கிழமை) பயணம் செய்ய விரும்புவோர் இன்று முன்பதிவு செய்து கொள்ளலாம்” என்றனர்.

Share:

No comments:

Post a Comment