நகரியில் ரோஜா மீது தாக்குதல் நடத்த முயற்சி
ஆந்திர மாநிலத்தில், நடிகையும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவை உறுப்பினருமான ரோஜாவை தெலுங்கு தேசக் கட்சியினர் தாக்க முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தனது நகரி தொகுதியில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனை திறப்பு விழாவுக்கு தனது கட்சி நிர்வாகிகளுடன் ரோஜா நேற்று சென்றார். இந்த நிகழ்ச்சியில் ஆந்திர அமைச்சர் அமர்நாத் ரெட்டியும் வந்திருந்தார். அப்போது, அங்கிருந்த தெலுங்கு தேசக் கட்சியினர், ரோஜாவை நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக் கூடாது என வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனால், இரு தரப்பினரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
இந்நிலையில், அங்கிருந்த சிலர் ரோஜாவை தாக்க முயற்சித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், போலீஸார் தலையிட்டு இரு தரப்பினரையும் கலைந்து போகச் செய்தனர்.
No comments:
Post a Comment