தாய்லாந்தில் குகையில் சிக்கிக் கொண்ட சிறுவர் கால்பந்து அணி: 10 நாட்களுக்குப் பிறகு உயிருடன் கண்டுபிடிப்பு

தாய்லாந்தில் குகை ஒன்றில் சிக்கிக் கொண்டிருந்த கால்பந்து அணியைச் சேர்ந்த 12 சிறுவர்களும், அவர்களது பயிற்சியாளரும் 10 நாட்கள் நடந்த பல  போராட்டக்களுக்குப் பிறகு கண்டிப்பிடிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

தாய்லாந்து நாட்டின் மா சே நகரில் தாம் லுவாங் என்ற குகை உள்ளது. இந்தக் குகை 10 கி.மீ நீளம் உடையதாகும். இந்தக் குகைக்குள் கடந்த வாரம் 11வயது முதல் 16-வயதுவரை உடைய 12 சிறுவர்கள் கொண்ட கால்பந்து அணியைச் சேர்ந்தவர்கள் இந்தக் குகைக்குள் சென்றனர். இந்தச் சிறுவர்களுடன் சேர்ந்து அணியின் துணைப்பயிற்சியாளரும் சென்றார்.

ஆனால், இவர்கள் சென்ற நாளில் இருந்து அங்குப் பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து குகையைவிட்டு வெளியேற முடியவில்லை. குகைப்பகுதி முழுவதையும் வெள்ள நீர் சூழ்ந்தது. இந்தச் சிறுவர்களையும், அணியைக் காணாமல் பல்வேறு இடங்களில் அணி நிர்வாகம் தேடியுள்ளது. தாய்லாந்து நாட்டின் கடற்படை வீரர்கள், பேரிடர் மீட்புப்படையினர் வரவழைக்கப்பட்டுத் தேடுதல் வேட்டையில் இறங்கினர். பிரிட்டிஷ் போன்ற சர்வதேச நாடுகளும் தாய்லாந்துக்கு  உதவி கரம் நீட்ட, தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்றது.

மீட்புப் பணியில் ஈடுபடும் வீரர்கள்

 

தாய்லாந்து முழுவதும் இந்தச் செய்தி வேகமாக பரவ, சிறுவர்கள் மீட்கப்பட வேண்டும் தொடர்ந்து பிரார்த்தனைகள் நடந்து கொண்டிருந்தது.

இந்த  நிலையில் 10 நாட்களுக்கு பிறகு குகையில் சிக்கிக் கொண்டிருந்து கால்பந்து அணியின் சிறுவர்களும், அவர்களது பயிற்சியாளரும்  இருக்கும் இடத்தை  திங்கட்கிழமை கண்டுபிடித்துள்ளனர்.

 குகையிலிருந்து “ இன்று என்ன கிழமை எங்களுக்கு பசிக்கிறது. நாங்கள் வெளியே செல்ல வேண்டும்” என்று  சிறுவர்கள் கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தொடர்ந்து சிறுவர்களை மீட்கும் பணி நடந்து வருவதாக தாய்லாந்து ராணுவன் கூறியுள்ளது.

குகையிலிருக்கும் சிறுவர்கள்  வீடியோவை தாய்லாந்து ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

 

சிறுவர்கள் மீட்கப்பட்டது குறித்து சியாங் ராய் ஆளுநர் நரோன்சாக் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும்போது, " சிறுவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். ஆனால் இன்னும் மீட்புப் பணி முடியவில்லை. எங்களது அடுத்த பணி அவர்களை பத்திரமாக மீட்டு அவர்களது இல்லத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். "என்றார்.

 

சிறுவர்களை கண்ட மகிழ்ச்சியில் பெற்றோர்கள்

 

சிறுவர்கள் இருப்பிடத்தை கண்டறிந்த  மீட்புப் பணியினருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

 

Share:

No comments:

Post a Comment