பூசாரியை தாக்கி சாமி சிலை சேதம்: உ.பி.யில் பதற்றம்
உத்தரபிரதேசத்தில் கோயிலில் சாமி சிலைகள் சேதப்படுத்தப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது.
உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் உள்ள ராய்டுய்யா கிராமத்தில் உள்ள கோயிலில் நேற்று முன்தினம் இரவு 4 பேர் புகுந்தனர். அங்கிருந்த பூசாரி அனில் பண்டிட்டை அடித்து உதைத்ததுடன் சாமி சிலை களையும் சேதப்படுத்தினர். தகவல் அறிந்து போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 3 பேரை கைது செய்தனர். சேதமான சிலைகள் அகற்றப்பட்டு புதிய சிலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பரேலி மாவட்ட வீரேந்திர குமார் சிங் தெரிவித்தார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ராய்டுய்யா கிராமத்தில் இரு பிரிவினர் கல்வீச்சில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவுகிறது.
No comments:
Post a Comment