ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் பங்குகள் ஏலம் போட்டியிலிருந்து விலகியது முன்ஜால், பர்மன் குடும்பம்

ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் நிறுவன பங்குகளை வாங்கும் முடிவை சுனில் காந்த் முன்ஜால் மற்றும் பர்மன் குடும்பத்தினர் கைவிட்டுள்ளனர். இதன் மூலம் ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் நிறுவன பங்குகளை வாங்க போட்டிபோடும் நிறுவனங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.

ஹீரோ என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் சுனில் காந்த் முன்ஜால் மற்றும் டாபர் குழுமத்தைச் சேர்ந்த பர்மன் குடும்பத்தினரும் ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் நிறுவன பங்குகளை வாங்க ஆர்வம் காட்டினர். ஆனால் இப்போது போட்டியிலிருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்விரு நிறுவனங்கள் வெளியேறியதைத் தொடர்ந்து இப்போது ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தை வாங்க ஆர்வம் காட்டும் பட்டியலில் மணிப்பால் ஹெல்த் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் ஐஐஹெச் ஹெல்த்கேர் பிஹெச்டி நிறுவனமும், ரேடியண்ட் லைஃப் கேர் நிறுவனமும் உள்ளன.

ஐஐஹெச் ஹெல்த்கேர் நிறுவனமானது இந்தியாவில் மிகப் பெரிய மருத்துவமனை குழுமத்தைக் கொண்டுள்ள கேகேஆர் குழும நிறுவனமாகும். ஐஐஹெச் ஹெல்த்கேர் நிறுவனம் டிபிஜி ஆசியா நிறுவனத்தின் அங்கமாகும்.

ஐஐஹெச் ஹெல்த்கேர் நிறுவனம் மலேசிய பங்குச் சந்தைக்கு அனுப்பிய கடிதத்தில் ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் நிறுவன பங்குகளை வாங்கும் முடிவில் தொடர்ந்து இருப்பதாகவும், இந்த முடிவானது ஜூலை 16 மாலை 5 மணி வரை செல்லுபடியாகும் என்றும் தெரிவித் துள்ளது.

மணிப்பால் டிபிஜி நிறுவனம் ஒரு சீலிட்ட கவரை அளித்துள்ளது. இது மற்ற நிறுவனங்கள் அளித்துள்ள ஏலம் கேட்பு கவர் பிரிக்கப்படும் சமயத்தில் இதுவும் பிரித்து பார்க்கப்படும் என்று தெரிகிறது. இந்த சீலிட்ட உறையில் இவ்விரு நிறுவனங்களும் ஏற்கெனவே தாங்கள் அளித்த ஏல கேட்பு தொகையை மாற்றியமைத்து அளித்துள்ளனவா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மணிப்பால் டிபிஜி நிறுவனம் முன்னர் அளித்திருந்த ஏல கேட்பு மனுவில் ரூ. 2,100 கோடியை முதலீடு செய்யப் போவதாகவும், முன்னுரிமை பங்குகளில் ரூ. 180 கோடி முதலீடு செய்யவிருப்பதாகவும் இதன் மூலம் ஃபோர்டிஸின் 18.4 சதவீத பங்குகளை வாங்கிக் கொள்ள ஆர்வம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தது. இதன் மதிப்பு ரூ.9,403 கோடியாகும்.

ஐஹெச்ஹெச் நிறுவனம் ஃபோர்டிஸ் நிறுவனத்தின் பங்குகளை ரூ. 175 விலையில் 50 சதவீத அளவுக்கு வாங்க ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தது. இதன் மதிப்பு ரூ. 7,400 கோடியாகும். ரேடியன்ட் கேகேஆர் குழுமம் ஃபோர்டிஸ் முலுந்த் மருத்துவமனையை ரூ. 1,200 கோடிக்கு உடனே வாங்கிக் கொள்வதாகவும், மேலும் ரூ. 680 கோடி முதலீடு செய்வதாகவும் அறிவித்தது.

Share:

No comments:

Post a Comment