கர்நாடக காங். தலைவராக தினேஷ் குண்டுராவ் நியமனம்
கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக தினேஷ் குண்டுராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகாவில் தேர்தலுக்கு பிறகு மஜத - காங்கிரஸ் கூட்டணி அரசு அமைந்துள்ளது. இந்த அரசில் துணை முதல்வராக, மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த பரமேஷ்வர் பதவியேற்றார்.
இந்நிலையில் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் அசோக் கெலாட் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “கர்நாடக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக உள்ள தினேஷ் குண்டுராவ், மாநில தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். துணைத் தலைவராக ஈஸ்வர் கண்ட்ரே நியமிக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.
காந்திநகர் சட்டப்பேரவைத் தொகுதியில் 5 முறை வெற்றி பெற்றுள்ள தினேஷ் குண்டுராவ், கடந்த அமைச்சரவையில் உணவுத்துறை அமைச்சராக இருந்தார். இந்த முறை அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. தினேஷ் குண்டுராவ் காங்கிரஸ் கட்சியில் தென் கர்நாடக பொறுப்பாளராகவும், தேர்தல் பிரச்சாரக் குழு தலைவராகவும் பதவி வகித்துள்ளார். 2019 மக்களவைத் தேர்தலை மனதில் வைத்து, இவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment