சிரியா அரசுப் படை தாக்குதல்: ஐஎஸ் தலைவரின் மகன் பலி
ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவரது மகன் சிரியாவில் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை ஐஎஸ் அமைப்பு தரப்பில், "சிரிய அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் ஐஎஸ் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதியின் மகன் கொல்லப்பட்டார். கொல்லப்பட்ட ஹுதைஃபா அல் பத்ரி ஐஎஸ் அமைப்பில் சிறந்த வீரராக இருந்துள்ளார். சிரியா மற்றும் ரஷ்யப் படைகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக சிரியாவின் ராக்கா அருகே கடந்த ஆண்டு ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் சுகோய் ரக போர் விமானங்கள் மூலம் அவர்கள் குழுமியிருந்த பகுதியில் சுமார் 10 நிமிடம் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
இதில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் 30 முக்கிய தளபதிகளும், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த 300க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஐஎஸ் அமைப்பின் தலைவர் இப்ராஹிம் அபு பக்கர் அல் பாக்தாதியும் உயிரிழந்திருப்பதாக ரஷ்யாவும், அமெரிக்காவும் கூறியது. ஆனால் இதனை குர்திஷ் படையினர் மறுத்தனர்.
இந்த நிலையில் அல் பாக்தாதியின் மகன் கொல்லப்பட்டிருப்பதாக ஐஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment