ஏமனில் திருமண நிகழ்வில் வான்வழித் தாக்குதல்: 11 பேர் பலி
ஏமனில் சவுதி கூட்டுப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 11 பேர் பலியாகினர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதுகுறித்து சினுவா செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், "ஏமனில் வடக்குப் பகுதியிலுள்ள சடா மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை திருமண நிகழ்வு ஒன்று நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு சவுதியின் கூட்டுப் படைகள் நடத்திய தாக்கியதில் 11 பேர் பலியாகினர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் மற்றும் பெண்கள்" தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் குறித்து இதுவரை எந்த கருத்தையும் சவுதி தரப்பிலிருந்து தெரிவிக்கப்படவில்லை.
உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட் டுள்ள ஏமனில், அதிபர் அபெட்ரபோ மன்சூர் ஹாதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படை தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் அதிக எண்ணிக்கையில் அப்பாவி மக்கள் பலியாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கூட்டுப் படை தலையிட்ட பிறகு 6,600-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஐ.நா. கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment