சுனந்தா புஷ்கர் மரண வழக்கு: சசி தரூர் முன்ஜாமீன் மனு நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு
சுனந்தா புஷ்கர் இறந்த வழக்கில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூரின் முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பை டெல்லி நீதிமன்றம் வியாழக்கிழமைக்கு (இன்று) ஒத்தி வைத்தது.
சசி தரூரின் மனைவியான சுனந்தா புஷ்கர், கடந்த 2014, ஜனவரி 17-ம் தேதி, டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இறந்து கிடந்தார். இந்த வழக்கில் சசி தரூருக்கு எதிராக கடந்த மே 14-ம் தேதி டெல்லி போலீஸார் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். சுமார் 3,000 பக்க குற்றப் பத்திரிகையில் சசி தரூர் பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது.
இந்த வழக்கில் வரும் 7-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி டெல்லி நீதிமன்றத்தில் சசி தரூர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு சிறப்பு நீதிபதி அர்விந்த் குமார் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சசிதரூருக்கு முன்ஜாமீன் வழங்கினால் நாட்டை விட்டு வெளியேறி விடுவார் என டெல்லி போலீஸார் ஆட்சேபம் தெரிவித்தனர்.
இதையடுத்து முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பை வியாழக்கிழமைக்கு (இன்று) நீதிபதி ஒத்திவைத்தார்.
No comments:
Post a Comment